48
ஒரு கவிஞன் தனக்காக மட்டும்
யோசிப்பதில்லை
சக இதயத்தின் குமுறல்களுக்கும்
நிறைவேறா ஆசைகளுக்கும்
தன் கவிதை தீனியாகிப் போகட்டும்
என்பதற்கும் சேர்த்து தான்
யோசிக்கிறான்..
சில சமயம் அவனுக்காகவும்
வாழ்ந்தும் போகிறான்
இருப்பினும் அவன் ஒருமையிலே
விமர்சிக்கப்படுகிறான்
ஒருமையிலே ஆரதிக்கப்படுகிறான்
ஒருமையில் சில நேரம் நசுக்கவும் படுகிறான்