நமது சூழ்நிலைகளை
மற்றவர்கள் அறியாத
வரை அவனுக்கு
ஏமாற்றுக்காரனென பெயர்
சூட்டி பார்க்கும்
இந்த சமூகம்.
நாம் துன்புறுவதை
பார்த்து இன்புற்றுக் கிடக்கும்
சமூகத்திற்கு தெரியாது
பல இன்னல்கள்
மத்தியில் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்
என்று.
எங்கு
பார்த்தாலும்
சுயநலம் நிறைந்து
காணப்படுகிறது இதோ
எனக்கு மட்டும்
சுயநலம் பிடித்து
ஆடுகிறேன் என்று
கூறிக் கடந்து
போகிறது இந்த
காலம்.
பரிதாபம் கொள்ள
யாருமில்லை பாவம்
அவன் ஏழை
எனக் கூறாது
பணம் நிறைந்து
கிடக்கிறதா என
பார்த்து போகிறார்கள்
நயவஞ்சகமா மானிட
நடிகர்கள்.
இருந்தும் எனக்கான
வழிகளை நானே
தயார் செய்து
தயக்கத்தோடு கடந்து
கொண்டிருக்கிறேன் என்னோடு
யாராவது வருவார்களா
என்று.
அஜ்மல்கான் பொத்துவில்