57
இருளில் தொடங்கி
ஒளியில் முடியும்
நிலவின் பயணம்
கண்களில் தொடங்கி
கண்ணீரிலோ கைகோர்ப்பிலோ
முடியும் காதல்
முயற்சியில் தொடங்கி
வெற்றியில் முடியும்
முன்னேற்றத்தின் இரகசியம்
கருவறைக்கும்
கல்லறைக்கும் பொதுவில்
பூலோக சுழற்சி
அழுகையில் தொடங்கி
அழுகையில் முடியும்
மனித வாழ்வு
அன்பில் தொடங்கி
அன்பில் மட்டுமே முடியும்
அம்மாக்களின் கரிசனம்