51
அருமை மிக்க நண்பனே
கவிதை ஒன்று சொல்கிறேன்.
கவனமாக கேட்டிடுவாய்
அதில் படிப்பினையும் பெற்றிடுவாய்
நட்பு என்ற பெயரிலே
நஞ்சு வைத்த சிலர்
போலியாகப் பழகினர்.
பின்பு சாட்டுப் போக்கும் கூறினர்.
பசுமை நிறைந்திருந்த என் வாழ்வு
போலியான நட்புக்களால் ஏற்பட்டது
மனத் தாழ்வு
ஒரு நாள் பையில் பணமும் தீர்ந்தது
மறுநாள் சேர்ந்திருந்த நட்புகளால்
ஏற்பட்டது மனத்தாழ்வு
புரிதல் இல்லாத நண்பர்களால்
தனிமையே பரிசாக கிடைத்தது.
புரிய வைக்கவும் முடியாமல்
பிரிந்திருக்கவும் முடியாமல்
தலை குனிந்து நிற்கிறேன்
மிகப் பெரும் தனிமையில் தவிக்கிறேன்