தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற SPARK இறுதிப் போட்டியில் ‘SPARK இளம் தொழில் முனைவோர் பத்திரிகையாளர்’ விருதை வென்றார், சண்டே ஒப்சேர்வர் பத்திரிகையாளர், தினுலி பிரான்சிஸ்கோ. அவருக்கான விருதை லேக்ஹவுஸ் நிறுவன தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் வழங்குகின்றார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துடன் இணைந்து இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தனித்துவமான முயற்சியான SPARK போட்டியானது, இலங்கையில் இளம் தொழில்முனைவோரை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது முகிழ்ந்து வரும் தொழில்முனைவோருக்கு உதவும் சூழலை உருவாக்குவதிலும், நாட்டின் இளைஞர்களிடையே தொழில் முனைவு கலாசாரத்தை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
இந்த ஆண்டின் SPARK இறுதிப் போட்டி இரண்டு புதிய விருதுகளை அறிமுகப்படுத்தியது: “இளம் தொழில் முனைவு பத்திரிகையாளர்” மற்றும் “இளம் தொழில் முனைவோர் பத்திரிகையாளர்.” என்பனவே அவையாகும். இந்த விருதுகள் இளைஞர்களிடையே தொழில் முனைவு மனப்பான்மையை ஊக்குவிப்பதில் சிறந்து விளங்கும் இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் இலங்கையில் வணிக நட்பு சூழலை உருவாக்குவதற்கு ஆதரவளிக்கும் மற்றும் தொடக்க வணிகங்களை நடத்தும் ஊடகவியலாளர்களை அங்கீகரிக்கின்றன.