இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், 2024 முதல் அரையாண்டு காலப்பகுதியில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பிரதான அளவுகோல்களில் உறுதியான வளர்ச்சி மற்றும் வினைத்திறனை பதிவு செய்துள்ளது.2024 ஆம் ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் தேறிய கட்டுப்பண வழங்கல் ரூ. 9.8 பில்லியனாக உயர்ந்திருந்தது. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 16% வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து இலங்கையர்களின் ஆயுளை பாதுகாப்பது மற்றும் நலனுக்கு வளமூட்டுவது எனும் தனது நோக்கத்தின் பிரகாரம், ரூ. 3.3 பில்லியனை உரிமைகோரல்களாக பதிவு செய்து காப்புறுதிதாரர்களுக்கான தமது அர்ப்பணிப்பை நிறுவனம் மீளுறுதி செய்திருந்தது.
ஆண்டில் ரூ. 5.7 பில்லியனை தேறிய முதலீட்டு வருமானமாக நிறுவனம் பதிவு செய்திருந்தது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. யூனியன் அஷ்யூரன்ஸின் வினைத்திறனான சொத்துகள் ஒதுக்கீடு மூலோபாயம், குறைந்த வட்டி வீதத்துடனான சூழல் ஆகியவற்றில் இது பிரதிபலித்திருந்தது.
2024ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழான சொத்துகள் ரூ. 86.6 பில்லியனாக பதிவாகியிருந்தது. மேலும், மூலதன போதுமை விகிதம் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாட்டை விட உயர்ந்த மட்டத்தில் பேணப்பட்டிருந்தது.