இலங்கையின் முன்னணி LP எரிவாயு வழங்குனரான Litro Gas Lanka Ltd., கொழும்பு கிங்ஸ்பரியில் அண்மையில் நடைபெற்ற இலங்கை மட்பாண்டங்கள் மற்றும் கண்ணாடி கவுன்சிலின் (SLCGC) 18ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தின் தொழில்நுட்ப அமர்வின் போது நாட்டின் Tiles மற்றும் கண்ணாடி தொழிற்சாலைகளுக்கு ஆற்றலளிப்பதில் அதன் முக்கிய பங்கை வெளிப்படுத்தியது.
லிற்ரோ கேஸ் அனுசரணை வழங்கிய தொழில்நுட்ப அமர்வு, இந்த முக்கிய துறைகளுக்குள் ஆற்றல் திறன், நிலைத்தன்மை மற்றும் புதுமை ஆகிய தலைப்புகளில் கவனம் செலுத்தியது. Litro இன் கூட்டு அணுகுமுறையானது, தடையில்லா ஆற்றல் வழங்கலை உறுதிசெய்வதற்கும் மற்றும் ஆற்றல் மிகுந்த தொழில்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும், குறிப்பாக பொருளாதார மற்றும் ஏற்பாட்டியல் சவால் காலங்களில் அதன் நீண்டகால உறுதிப்பாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அனுபவமும் தொலைநோக்கும் கொண்ட அரவிந்த பெரேரா 2024/2025 தவணைக்கான ஜனாதிபதியாக இப்பொதுக் கூட்டத்தில் நியமிக்கப்பட்டார்/.
ஜெய்சிங் சம்பத் – தலைவர் புனே கேஸ், இந்தியா & லங்கா கேஸ்டெக், தொழில்துறையில் முதல் தலைமுறை தொழில்முனைவோர், எதிர்கால போட்டித்தன்மையை பராமரிக்க ஆற்றல் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். LP கேஸ் பயன்பாட்டில் உள்ள போக்குகளை அவர் எடுத்துரைத்தார்,
நீண்ட கால தொழில்துறை வெற்றியை மேலும் வளர்ப்பதற்கு நிலையான ஆற்றல் நடைமுறைகளை நோக்கிய மாற்றத்தை வலியுறுத்தினார்.