ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரங்களின் போது விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை நிர்வகிக்கும் போது உள்ளடக்கத்தை உருவாக்குவது பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்ளும் வேலைத் திட்டமொன்றை TikTok மேற்கொண்டுள்ளது. குறிப்பாக முக்கியமான நேரத்தில் பொறுப்பான மற்றும் நம்பகமான தகவல்களைப் பயன்படுத்துமாறு TikTok வலியுறுத்துகிறது.
TikTok இன் சமூகக் கோட்பாடுகளுக்கு அமைய பொய்யான மற்றும் தவறான தகவல், வன்முறை மற்றும் வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க அனுமதியுள்ளது. வாக்காளர் பதிவு, வேட்பாளர் தகுதிகள், வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட மக்களை தவறாக வழிநடத்தும் தகவல்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள TikTok, வாக்காளர்களை அச்சுறுத்தும், வாக்களிப்பதை ஊக்கப்படுத்தும் மற்றும் வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கத்தையும் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தச் சட்டங்களைச் செயல்படுத்த உலகளவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 40,000 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக உளவுத்துறை நிறுவனங்கள், தொழில் கூட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் TikTok இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.தவறான தகவலை எதிர்த்துப் போராட உதவுவதற்காக, TikTok உள்ளூர் மற்றும் பிராந்திய உண்மை சரிபார்ப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்டு, தேர்தல் தவறான தகவலை நிலையான முறையில் துல்லியமாக அகற்ற உதவுகிறது. ஆய்வுக்கு உட்பட்ட அல்லது உறுதிப்படுத்தப்படாத உள்ளடக்கம் For You Feed பரிந்துரையிலிருந்து தடைசெய்யப்படுகிறது, மேலும் பார்வையாளர்களுக்கும் உள்ளடக்க படைப்பாளர்களுக்கும் அத்தகைய உள்ளடக்கத்தின் தவறான தன்மையைப் பற்றி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.