உணவுப் பாதுகாப்பு, குறைந்த விலையில்.
உற்பத்தியின் தரத்தினை உயர்த்துவதன் மூலம் சுகாதாரதப் பாதுகாப்பு
நவீன விவசாயம்
நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான அரச அனுசரணை
புதிய அபிவிருத்தி வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு பிணையில்லாமல் விவசாய கடன் மற்றும் 50 ஆயிரம் விவசாய தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான நிதி வசதிகள்.
யானை, மர அணில், குரங்குகள், மயில் போன்ற காட்டு விலங்குகளினால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புக்களைத் தடுப்பதற்கு விஞ்ஞான ரீதியான தீர்வுகள்.
ஒவ்வொரு கமத்தொழில் சேவை பகுதியிலும் வாடகை அடிப்படையில் விவசாய இயந்திரங்களை வழங்கும் விவசாய சேவை விநியோக மையங்கள்.
விவசாய ஏற்றுமதிக் கிராமங்கள் 1000 உருவாக்கல்.
கல்ஓயா, இராஜாங்கனை, மின்னேரிய போன்ற பாரிய நீர்ப்பாசன கட்டமைப்புக்களைப் புனரமைத்தல்.
சிறந்த விவசாய நடைமுறைகளுக்கு அமைய இரசாயன சேதனப் பசளைகள் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளுக்கான மானியங்கள்.
விஞ்ஞான ரீதியாகத் தயாரிக்கப்பட்ட காணி பயன்பாட்டுத் திட்டம்.
கடற்றொழில் எழுச்சி
உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் சிறிய அளவிலான மீனவர்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள்.
பாதிப்படைந்துள்ள மீன்பிடித் தொழிலுக்கு புத்துயிர் அளிக்க எரிபொருள் மானியம்.
மீன் பெருகுவதைக் கணிக்கவும் அறுவடைக்குப் பின் ஏற்படும் விரயத்தைக் குறைக்கவும் நவீன தொழில்நுட்பத்துடன் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்
இறால், கடல் அட்டைகள், நண்டுகள், நீர்வாழ் தாவரங்கள் மற்றும் அலங்கார மீன்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி.
கால்நடை உற்பத்தி
அரச செயற்பாட்டில் உயர்தர தாய் விலங்குகள் மற்றும் குஞ்சுகள்.
கால்நடை உணவு, மருந்துகள், மற்றும் இதர உள்ளீடுகள் நியாயமான விலையில்
தயாரிப்பு விற்பனை மற்றும் விநியோகத்திற்கான தனியார் மற்றும் கூட்டுறவு வர்த்தக வலையமைப்பு.
சிறிய அளவிலான விவசாய அலகுகளை நடுத்தர அளவிலான வணிக அலகுகளாக மாற்றுவதற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள்.
பெண்கள் மற்றும் இளைஞர் தொழில்முயற்சியாளர்களின் 20 ஆயிரம் கால்நடை உற்பத்திப் பண்ணைகள்.
தரமான கல்வி
கல்வி அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
படிப்படியாக கல்விக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6%
அனைத்து மாணவர்களுக்கும் வீட்டிலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலைகள்.
தொழிற் கல்வியை 10ஆம் வகுப்பிலிருந்தே தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம்.
ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு துரித நடவடிக்கை.
ஆசிரியர் தொழில், இலங்கையின் பத்து அதிக சம்பளம் பெறும் தொழில்களுள் ஒன்றாக மாற்றப்படும்.
மஹபொல மற்றும் மாணவர் உதவித் தொகைகள் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ற வகையில்.
தொழிற் கல்விக்காக பல்கலைக்கழகக் கட்டமைப்பு.
மாணவர்களுக்கு உயர் பாதுகாப்பு
ஆபத்தான நிலையில் உள்ள பிள்ளைகளுக்கான குடும்ப அடிப்படையிலான பராமரிப்பு
அனைத்து மாணவர்களுக்கும் ஊட்டச்சத்துள்ள உணவு வேளை.
மாணவர்களின் மன மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பாடசாலை மற்றும் சமூகம் சார்ந்த திட்டங்கள்
நட்புறவுமிக்க அரசாட்சி
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி, மிகக் குறைந்த அலகுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் புதிய அரசியலமைப்பு
இலங்கை தேசத்தை உருவாக்கும் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் புதிய அரசியலமைப்பு
பாகுபாட்டிற்கு எதிரான ஆணைக்குழு.
மெய்நிகர் (ஒன்லைன்) பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம்.
விஞ்ஞான ரீதியாக ஒதுக்கப்படும் 25 அமைச்சுகளுக்கு 25 அமைச்சர்கள் மற்றும் தொடர்புடைய பிரதி அமைச்சர்கள். இராஜாங்க மற்றும் திட்ட அமைச்சுக்கள் ஒழிக்கப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுங்கத் தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது.
ஜனாதிபதி மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இரத்து.
அனைத்து குடிமக்களும் தங்கள் சொந்த மொழியில் சேவைகளை அணுகுவதற்கு ஒரு தேசிய மொழிக் கொள்கை
சட்டத்தை மதிக்கும் சமூகம்
அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது அடியாட்களால் திருடப்பட்ட சொத்துக்களை மீட்க “அரச சொத்து மீட்பு” நிறுவனம்.
நிதிக் குற்றங்கள், இலஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்கு நிரந்தர மூவர் கொண்ட உயர் நீதிமன்றம்
அனைத்து மாவட்டங்களிலும் ஊழல் எதிர்ப்பு விசாரணை அலுவலகங்கள்.
சட்ட நிர்வாகத்தில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைப்பதற்கும், குறிப்பிட்ட காலத்திற்குள் அதை முடிக்கவும் சட்ட ஏற்பாடுகள்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துதல் மற்றும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துதல் மற்றும் அடிப்படை மனித உரிமை வழக்குகளின் குற்றவாளிகளுக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி சட்ட நடவடிக்கைகள்.
நட்பு நீதிமன்ற வலையமைப்புக்கள் ஊடாக வழக்கு விசாரணை தாமதங்கள் களையப்படும்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைகள் 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு வழக்கு தொடரப்படும்.
மூலோபாய வெளிநாட்டு உறவுகள்
இலங்கையின் வெளிநாட்டு தூதரகங்களின் வலையமைப்பு மற்றும் அவற்றின் பணியாளர்களின் எண்ணிக்கை விரிவான மீளாய்வின் பின்னர் மறுசீரமைக்கப்படும்
தூதரகங்களுக்காக வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தல், சுற்றுலாத்துறை மேம்பாடு, தொழில் வாய்ப்புக்களை விரிவாக்குதல் போன்றன உள்ளடங்கிய செயற்றிறன் குறிகாட்டி.
பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் நிலம், கடல் அல்லது வான்வெளியை பயன்படுத்துவதை அனுமதி வழங்கப்படமாட்டாது.
அசையாத பொருளாதாரம்
மாதாந்த தனி நபர் வரி விலக்கு எல்லை 200,000 ரூபாய் வரை அதிகரிப்பு
உணவுப் பொருட்கள், சுகாதாரம், பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களுக்கு வற் வரி விலக்கு.
உற்பத்திப் பொருளாதாரத்தை விரிவாக்குவதற்காக புதிய அபிவிருத்தி வங்கி.
மூத்த குடிமக்கள் சேமிப்புக்கான நிலையான வைப்பு வட்டி விகிதத்தை விட 5% அதிக வட்டி
ஏற்றுமதியை 05 ஆண்டுகளுக்குள் 45 பில்லியன் டொலர் இலக்குடன் பல்வகைப்படுத்தல்.
நுண்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான சட்ட தலையீடு.
நுண்கடன், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்காக பிணையில்லாத கடன்கள் மற்றும் நிலுவையில் உள்ள கடன்களுக்காக சலுகை வங்கி
தகவல் தொழில்நுட்பத்தில் புதிய அணுகுமுறை
தகவல் தொழில்நுட்ப படையின் எண்ணிக்கையை 2030ஆம் ஆண்டாகும் போது 2 இலட்சமாக அதிகரித்தல்.
மேல், வடக்கு, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் 04 தகவல் தொழில்நுட்ப நிலையங்கள்.
தகவல் தொழில்நுட்ப பொருளாதாரம் 2030ஆம் ஆண்டளவில் 05 பில்லியன் டொலருக்கான உயர்த்தல்.
பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு
ஆசிரிய சேவைக்கு 20 ஆயிரம் பட்டதாரிகள்.
விஞ்ஞான தொழில்நுட்பம், பொறியியல், கணித பட்டதாரிகள் 3000 பேர் மற்றும் STEM இல்லாத பட்டதாரிகள் 9000 பேர்.
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு 12,000 பட்டதாரிகள்.
உள்நாட்டு இறைவரி, சுங்கம், வெளிநாட்டு சேவைகள் மற்றும் சுற்றுலாத்துறையில் 3000 வேலைவாய்ப்புக்கள்.
செயற்திறன்மிக்க போக்குவரத்துச் சேவை
05 வருடத்திற்குள் போக்குவரத்துத் தேவையில் 70 வீதம் பொது போக்குவரத்துச் சேவையிலிருந்து
உற்பத்தி மூலப்பொருட்கள், எரிபொருள் மற்றும் நுகர்வோர் பொருட்களை கொண்டு செல்வதற்கான புகையிரதச் சேவை.
நகர மற்றும் கிராமிய வீதிகளில் இரவு வேளைகளில் பொது போக்குவரத்துச் சேவையினை முன்னெடுத்தல்.
ஐந்து வருடத்தினுள் 50 ஆயிரம் கிலோமீற்றர் கிராமிய வீதிகள் புனரமைப்பு
போக்குவரத்துச் சேவைகளினுள் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் மற்றும் சிரமங்களைக் குறைப்பதற்கும், பாதுகாப்பான போக்குவரத்தினை மேற்கொள்வதற்குமான வசதிகள்
நிலையான வலுசக்தி
தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்தி, பிராந்தியத்தில் குறைந்த மின் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கையை படிப்படியாக மாற்றுதல்.
புதுப்பிக்கத்தக்க 2500 மெகாவோட் எரிசக்தியை தேசிய கட்டமைப்பில் இணைப்பதற்கும், அதன் பலன்களை நுகர்வோர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள்.
இலங்கையின் புவியியல் இருப்பிடத்தைப் பயன்படுத்தி எரிபொருள் மற்றும் எரிசக்தி வர்த்தகத்திற்கான மையமாக இலங்கையை உருவாக்குதல்.