Home » நாட்டை வெற்றியடைய செய்யும் ஐந்தாண்டுகள்
இயலும் ரணிலுடன்....

நாட்டை வெற்றியடைய செய்யும் ஐந்தாண்டுகள்

by Damith Pushpika
September 1, 2024 6:00 am 0 comment

• தேரவாத வர்த்தக பொருளாதாரம்;

• நடவடிக்கை – 2025 இற்கு அப்பால்

• ஒளிரும் சமூகத்தை நோக்கி

• தாய்நாட்டை வெற்றிபெறச் செய்வோம்

• ஒன்றுபட்ட இலங்கை

முடியாது முடியாது எனச் சொல்லமுடியாது ! – இயலும்..!! நான் அதைச் செய்தேன்!!

நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் விழுந்த வேளை எந்தவொரு அரசியல் கட்சியோ, எந்தவொரு தலைவரோ நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலை பொறுப்பேற்கவில்லை.

நான் அதைப் பொறுப்பேற்றேன்.

அந்தக் கதையை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட அந்த அராஜக நிலைமை உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?

சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் தோள்களில் சுமந்து கொண்டு நாட்கணக்கில் வரிசைகளில் நின்றோம். தாய் காலையில் மகள் மாலையில். தகப்பன் நடுநிசியில் மகன் அதிகாலையில் முச்சக்கர வண்டிக்கு, வாகனத்துக்கு பெற்றோல் கொஞ்சம் நிரப்புவதற்கு இரவு முழுவதும் வாகனத்துக்குள் நித்திரை விழித்தோம். எரிபொருள் வரிசைகளில் உயிரிழப்புக்கள் கூட நிகழ்ந்தன.

சொல்வதற்கு யாரும் இருக்கவில்லை. செவிசாய்ப்பதற்கு ஒருவரும் இருக்கவில்லை. நெருக்குதலைத் தாங்க முடியாமல் மக்கள் வீதியில் இறங்கினர். ஆர்ப்பாட்டம் நடத்தினர். வீடுகளுக்கு தீ வைத்தார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை நடு வீதியில் கொலை செய்தார்கள்.

பிரதமர் இராஜினாமாச் செய்தார். ஜனாதிபதி விலகிச் சென்றார். மார் தட்டிக்கொண்டிருந்த சகல அரசியல் தலைவர்களும் தன்னால் முடியாதெனக் கூறி மூலை முடுக்குகளில் ஓடி ஒளிந்து கொண்டனர்.

நான் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றம் சென்ற ஒரு தனி மனிதன். இறுதியாக எனது வீட்டுக்கும் தீ வைத்தார்கள். முழுநாடும் தீப்பற்றி எரிந்தது.

மீண்டும் ஒருபோதும் அமைதியான ஒரு நாட்டை, துன்பமின்றி வாழ முடியுமான ஒரு நாட்டை உருவாக்க முடியுமென ஒருவர் கூட நினைக்கவில்லை. அது ஒரு கனவாகத் தான் இருந்தது.

ஆனாலும் எப்பொழுதும் அளவு கடந்து நாட்டை நேசித்த நான், பற்றி எரியும் இந்த நாட்டைக் கண்டு ஓடி ஒளிந்துக் கொள்ள விரும்பவில்லை. உயிரைப் பணயம் வைத்து எரியும் நெருப்பில் குதித்து நெருப்பை அணைத்தேன்.

இன்று இந்த நாட்டில் மக்கள் புன்னகைப்பதைக் காணும் போது, கஷ்டத்துடன் எனினும் மூவேளையும் சாப்பிடுவதைக் காணும் போது, முச்சக்கர வண்டி – வாகனங்கள் பாதையில் செல்வதைக் காணும் போது, நீண்ட நாட்களுக்குப் பின்னர் புத்தாண்டு கொண்டாட்டங்கள், தைப்பொங்கல் கொண்டாட்டங்கள், ரமழான் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுவதைக் காணும் போது, வெசாக் தோரணங்கள், நத்தார் அலங்கரிப்புக்கள் பாதைகளின் இரு புறங்களிலும் நிர்மாணிக்கப்படும் போது, ஆயிரக் கணக்கில் அன்னதானம் வழங்குதல்கள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படுவதைக் காணும் போது, நான் எல்லையற்ற மகிழச்சியடைகின்றேன்.

அன்று ஓடி ஒளித்திருந்த அரசியல்வாதிகள் இன்று வெளியில் வந்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான 10 பில்லியனுக்கும் அதிகமான நிதியை தேசிய பொருளாதாரத்துக்கு தேடித் தந்த என்னைத் திட்டித் தீர்ப்பதை நான் பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

ஆம்..! நான் வங்குரோத்து நிலையில் இருந்த ஒரு நாட்டையே பொறுப்பேற்றேன்.

நாம் தற்போது வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு, கடன் மறுசீரமைப்பு பணிகளை நிறைவுசெய்து முன்னோக்கிச் செல்கிறோம்.

2019இல் நான் பிரதமர் பதவியிலிருந்து நீங்கிச் சென்ற போது எமது மொத்த தேசிய உற்பத்தி 89 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. ஆனால் 2022இல் நான் ஜனாதிபதிப் பதவியை ஏற்ற போது அது 76.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. அதாவது 12.1பில்லியன் அமெரிக்க டொலர்களால் சரிவடைந்திருந்தது..!

ஆயினும் 2023இன் இறுதியில் அதனை 84.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க எம்மால் முடிந்தது. இவ்வாறு பயணிக்கும் இப்பயணம் தொடருமாயின் 2025இன் இறுதியில் அது 89 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும். அதனைத் தொடர்ந்து நாளுக்கு நாள் அது அதிகரிக்கும்.

மொத்த தேசிய உற்பத்தி அதிகரிக்கும் போது எமது வருமானம் அதிகரிக்கும். கொள்வனவு சக்தி அதிகரிக்கும். வாழ்க்கைத் தரம் உயர்வடையும்.நான் தற்போது கடினமான தொங்குபாலப் பயணத்தில் நீண்டதூரம் வந்துள்ளேன்.

கடந்த காலம் முழுவதும் கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் தான் உங்களுக்கு தற்போது ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். அது உண்மையல்ல.

இக் கஷ்டமான நிலையில் நாங்கள் கடனை மீளச் செலுத்தினோம். 2022ஆம் ஆண்டு சுமார் 2.5 பில்லியன் டொலர்கள். 2023ஆம் ஆண்டு சுமார் 2.6 பில்லியன் டொலர்கள்.

இனி எமக்கு தொங்குபாலத்தை கடப்பதற்கு இன்னும் கொஞ்சம் தூரம் தான் எஞ்சியுள்ளது.

அதனையும் கவனமாக மற்றும் கஷ்டத்துடன் சென்று சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்குவதா?

இன்றேல் பொய் வாக்குறுதிகள் மற்றும் ஒவ்வொரு விதமான பரீட்சித்துப் பார்த்தல்களை நம்பி ஏமாற்றமடைந்து அதல பாதாளத்தில் வீழ்வதா?

சிந்தியுங்கள்..

மற்றுமொரு விடயம்.

நான் இவை எல்லாவற்றையும் பாராளுமன்றத்தில் தனி ஆசனம் ஒன்றின் மூலம் தான் செய்தேன்.

ஆனாலும் இப்பயணத்தை தொடர்வதற்குத் தேவையான சட்டங்கள் போன்றே திட்டங்களைத் தயாரிப்பதற்கு பல கட்சிகளின் ஒத்துழைப்பை என்னால் பெற முடிந்தது.

அதேபோல் நாட்டை நேசிக்கும், பல்வேறு அரசியல் கொள்கையுடைய நீங்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கினீர்கள்.

ஆகவே தான் நான் ஒரு சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

நான் ஒரு கட்சி சார்பில் அல்லது ஒரு குழு சார்பில் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. பல்வேறு அரசியல் கொள்கையுடைய உங்களது சார்பில் நான் போட்டியிடுகின்றேன். பழைய பரம்பரையினர் துவக்கம் நவீன பரம்பரை வரை மாத்திரம் அல்ல. பிறக்கவுள்ள எதிர்கால சந்ததியினருக்காக…உங்களுடைய எதிர்காலத்திற்காக… எமது தாய் நாட்டுக்காக.

ஆம்.. நான் உங்களுக்காக, நாட்டுக்காக எதிர்வரும் 05 ஆண்டுகளுள் எஞ்சியவற்றையும் செய்து காட்டுவேன்.

நாட்டை கட்டியெழுப்புவேன்..!

சுதந்திரத்துக்குப் பின்னர் நூறு ஆண்டுகள் பூர்த்தியடையும் 2048 இல் கடன் சுமையிலிருந்து விடுபட்ட எமது தாய் நாடு உலகில் அபிவிருத்தியடைந்த, வளர்ச்சியடைந்த ஒரு நாடாக மாற்றமடையும்.

அப்போது நான் உயிருடன் இருக்க மாட்டேன். ஆயினும் 2022 இல் வீழ்ந்த நாட்டை தொடர்ச்சியாக மீட்டெடுத்து, எதிர்காலத்துக்காக பலமான ஒரு அத்திவாரம் அமைப்பதையே நான் இப்போது செய்து வருகிறேன்.

இது

உங்கள் அன்பின்

ரணில்.


மிகவும் அனுபவமுள்ள அபேட்சகர்

ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு,ஒரு நாட்டை மாற்றமடையச் செய்வதற்கு வாய்ப்பேச்சால் முடியாது. செயற்பாட்டால் தான் முடியும். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அதைச் செய்து காட்டினார்.

எரிபொருள் வரிசைகளில் சிக்குண்டு கஷ்டப்பட்ட மக்களை மிகவும் குறுகிய காலத்திற்குள் தானம் வழங்கும் அன்னதான வரிசைகளில் புன்னகையுடன் இருக்கும் நிலைமைக்கு மாற்றினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையையும் இன்றுள்ள நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

கடினமான தொங்கு பாலத்திலிருந்து இலங்கைத் தாயை கரை சேர்க்கும் பாரிய சவாலை அவர் பொறுப்பேற்றார். அப்பொறுப்பை சரிவர அவர் நிறைவேற்றினார்.

இவை அனைத்தையும் அவர் தொலைநோக்குடன் திட்டமிட்டு நிறைவேற்றினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் இதுவரை எந்தவொரு ஜனாதிபதியும் மேற்கொள்ளாத விதமாக புதிய சட்டங்களைக் கொண்டு வந்தார். புதிய சட்ட விதிகளை அங்கீகரிக்கச் செய்தார்.நாட்டை சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்காக அவர் இதுவரை பாராளுமன்றத்தில் சுமார் நூற்றுக்கு அண்மித்த சட்டங்களை அங்கீகரிக்கச் செய்தார். ஊழலுக்கு எதிரான சட்டம், மத்திய வங்கிச் சட்டம், தேர்தல்கள் செலவு ஒழுங்குவிதிகள், மறுசீரமைப்பு பணியகம், அரச கடன் முகாமைத்துவச் சட்டம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க சட்டம், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், அரச கடன்கள் சட்டம், மின்சக்தி சட்டம், பெண்களை வலுவூட்டும் சட்டம், அரச நிதி முகாமைத்துவச் சட்டம், பொருளாதார பரிமாற்றச் சட்டம் போன்ற சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள் அவற்றுள் பிரதானமானவை ஆகும்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான அபேட்சகர்கள் அனைவரும் ஒவ்வொரு அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகித்த நபர்கள் ஆகும். எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவிகளை வகித்தவர்கள் ஆவார்கள்.

அவர்களுள் அமைச்சர் ஒருவர் என்ற ரீதியில் நாட்டுக்கு பயனுள்ள வேலைத்திட்டங்களை அவர் மேற்கொண்டார். அவர் இளைஞர் விவகார அமைச்சராக இருந்தபோது இளைஞர் விவகார அமைச்சின் பொற்காலம் ஆகும். அவர் கல்வி அமைச்சராக இருந்த போது தான் இந்த நாட்டு கல்வித்துறையில்மறுமலர்ச்சி ஏற்பட்டது. அவர் கைத்தொழில் அமைச்சராக இருந்த காலம் தான் இந்த நாடு பூராக புதிய கைத்தொழிற்சாலைகள் உருவாக்கம் பெற்றன. அவர் பிரதமர் மற்றும் பொருளாதார கொள்கைகள் அமைச்சராக இருந்த காலத்தில் தான் நாட்டின் பொருளாதாரம் மிகவும் வளர்ச்சியடைந்த காலமாக இருந்தது. வேறு எந்த ஜனாதிபதி வேட்பாளருக்குத் தான் அது போன்ற ஒரு வெற்றிவாகை சூடிய வரலாறு உள்ளது?

அவர் பல தடவைகள் பிரதமராக பதவி வகித்தார் தான். அத்தகைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவருக்கு மேல் ஜனாதிபதி ஒருவர் இருந்தார். இன்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் முதன் முறையாக நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார். சுதந்திரமாக நாட்டுக்காக பணியாற்றுவதற்கு முதன் முறையாக அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றது. மிகவும் துன்பமான நிலைக்கு ஆளாகி இருந்த நாட்டை அவர் இரண்டு ஆண்டுகளுக்குள் ஒருவரும் நினைத்துப் பார்க்காத விதத்தில் கட்டியெழுப்பினார்.

வெறும் வீண் பேச்சுக்கள் இன்றி வேலை செய்து காட்டியவர் அவர் மாத்திரம் தான்,

அவரது இப்பயணத்தைப் பற்றி பலர் பகிரங்கமாக அவரைத் திட்டுகிறார்கள். இரகசியமாக அவரது செய்த நலன்களைப் போற்றிப் புகழ்கின்றார்கள். ஜனாதிபதி ஒருவரைத் தெரிவுசெய்வது பற்றி நீங்கள் இதுவரை ஒரு முடிவினை எடுக்காதிருப்பீர்களாயின் பின்வரும் கருத்துக்களை அறிவு சார்ந்த ரீதியில் வாசித்துப் பார்க்கவும். அதனை வாசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். ரணிலின் திறமையான செயலாற்றுகை பற்றிய இந்த விடயங்களை நாம் கூறவில்லை, சர்வதேச அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக விடயங்கள் பற்றிய பரந்துபட்ட அனுபவமுள்ள வெளிநாடுகளில் உள்ள மாபெரும் அறிஞர்கள் இவற்றைத் தெரிவிக்கின்றார்கள்.

• சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிரிஸ்டலீனா ஜோர்ஜியெவா(2023 செப்டம்பர்) “நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கான இலங்கை அரசின் அர்ப்பணிப்பு பற்றி நாம் திருப்தியடைகின்றோம்”

• தென்கொரியா ஜனாதிபதி யூன் சுக் யோல் (2023 செப்டம்பர் 19) – “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை சார்பில் முன்னெடுக்கும் பொருளாதாரத்தை மிளிரச் செய்யும் திட்டத்திற்காக எனது பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றேன். நாட்டில் நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் நோக்கம் கொண்ட அவரது இந்த வேலைத்திட்டத்தைப் பாராட்டி அவரது அர்ப்பணிப்பை நான் மெச்சுகின்றேன்”

• அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் (2024 ஜூலை 18); “இலங்கையின் மிகவும் சவால் மிகுந்த ஒரு காலகட்டத்தில் ஜனாதிபதி அடைந்த வெற்றிகளுக்கு எனது பாராட்டுக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் நாட்டில் ஸ்திரத் தன்மையினை ஏற்படுத்துவதற்கு அவரால் முடிந்துள்ளது”

• ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா (2024 மே 5)–“பொருளாதார மற்றும் செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள நிலையான முன்னேற்றம் தொடர்பில் நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கை அரசுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”

•ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் யோகோ கமிக்கவா (2024 மே 4)– “கடன் நெருக்கடியை தீர்ப்பதற்கும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்குமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான உங்களது தலைமைத்துவத்தை நான் பாராட்டுகின்றேன்”

• தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ (2024 பெப்ரவரி 19)– “நான் கடமை புரியும் பிராந்தியத்தில் இலங்கையின் கதை போன்று மிகப்பெரிய மீண்டும் மறுமலர்ச்சியடைந்த நாட்டின் கதை ஒன்று வேறு இல்லை”

இரண்டு ஆண்டுகளுக்குள் இவ்வாறான மாபெரும் அதிசயத்தை ரணில் செய்து காட்டினார்.

ஜனாதிபதி வேட்பாளர்களுள் அவ்வாறானவர்கள் இருக்கின்றார்களா? இல்லவே இல்லை. அவ்வாறாயின் உங்களது தெரிவாக இருக்க வேண்டியவர் அவர் தானே? ஆம்! ரணில்!

தேரவாத வர்த்தக பொருளாதாரம்

தேரவாத வர்த்தக பொருளாதாரம் என்பது உங்களுக்கு பழக்கப்பட்ட ஒரு சொல்லாக இல்லாதிருக்கக் கூடும்.

நாம் செவியுற்றும் அறிந்தும் வைத்திருப்பது, உலகின் பல்வேறு நாடுகள் அன்று தொடக்கம் பின்பற்றிய பல்வேறு பொருளாதார முறைகள் பற்றி ஆகும். அவற்றுள் ஒருசில பொருளாதார முறைகள் தோல்வியடைந்த காரணத்தால் பயன்பாட்டிலிருந்து நீங்கியவை ஆகும்.

நாம் தேரவாத வர்த்தக பொருளாதார முறையின் கீழ் பல்வேறு துறைகளை மேம்படுத்தி வருமானம் ஈட்டுகிறோம். அவை தொடர்பான தகவல்களை நாம் இங்கு குறிப்பிடுகின்றோம்.

வரலாற்றில் இலங்கையின் இராசரட்டை இராசதானி காலத்தில் இந்த நாட்டில் தேரவாத சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறைமை ஒன்று காணப்பட்டது.

அப் பொருளாதார முறைமையின் கீழ் நாம் சீனா முதற்கொண்டு பாரசீக நாடுகளுடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டோம். இந்து சமுத்திரத்தின் பொருளாதார

கேந்திரநிலையமாக பெயர்பெற்று விளங்கினோம். சமுத்திரப் பட்டுப்பாதையின் கேந்திர நிலையமாக பிரசித்திபெற்று விளங்கினோம்.

விசேடமாக ஒட்டுமொத்த கீழைத்தேசத்துக்கும் தானியம் விநியோகிக்கும் பொறிமுறை, வசதிகள் மற்றும் ஆற்றல் எம்மிடம் காணப்பட்டது.

அதன் காரணமாக இலங்கை கீழைத்தேயத்தின் தானியக் களஞ்சியமென பிரசித்தி பெற்று விளங்கியது.

13ஆம் நூற்றாண்டின் போதும் இராசரட்டை இராசதானி வீழ்ந்த போது தற்போதைய தாய்லாந்தின் அயோத்தியா இராசாதானி அந்த வர்த்தக கேந்திர நிலையத்தின் ஆதிக்கத்தை தனதாக்கிக் கொண்டது. இந்த இரண்டு இராசதானிகளும் 18 நூற்றாண்டுகளாக பிராந்தியத்தின் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது.

அண்மைய வரலாற்றில் மீண்டும் இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியன பொருளாதார ரீதியான பலத்தை உருவாக்குவதற்கு பாடுபட்டன.

1980 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நவீன தாய்லாந்து ஏற்றுமதி மற்றும் சுற்றுலாக் கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி பரிமாற்ற மடைந்தது. இலங்கை உள்நாட்டு உற்பத்திக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு இறக்குமதியினை மாற்றீடாக கொண்டு விளங்கியது.

தனி நபர் மொத்த தேசிய உற்பத்தி

ஆண்டு இலங்கை தாய்லாந்து

1960 144 அ.டொ 104 அ.டொ

2023 3,828 அ.டொ 7,172 அ.டொ

கடந்த ஆண்டுகளாக எமது பொருளாதார கொள்கைகளுக்கு முக்கிய அடித்தளமாக உள்நாட்டு உற்பத்தி காணப்படுகிறது. அன்றாட தேவைப்பாடுகளை நிறைவுசெய்வதற்கு உள்நாட்டு உற்பத்திகள் பற்றாக்குறையாக உள்ள காரணத்தால் பற்றாக்குறையானவற்றை இறக்குமதி செய்து வரவு செலவு இடைவெளியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களின் மூலம் ஈடு செய்யப்படுகிறது.

புத்தபெருமான் சாமஞ்ஞபல சூத்திரத்தில் சுட்டிக்காட்டியதன் பிரகாரம் நுகர்வுக்காக அன்றி முதலீட்டுக்காகவே கடன் பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.நாம் அப் பொருளாதார சிந்தனையைப் புறக்கணித்தோம். சுமார் 2022 ஆம் ஆண்டளவில் சுமார் 84 பில்லியன் பெருமளவு தொகை அமெரிக்க டொலர் கடன் நம்மீது சுமத்தப்பட்டிருந்தது.

அதில் பெருமளவு தொகையை நுகர்வுக்காகவே நாம் பெற்றோம். இதன் காரணமாக நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்தார் முன்னிலையில் இழிநிலைக்குத் தள்ளப்பட்டோம். நாடு முற்றுமுழுதாக வீழ்ச்சியடைந்தது.

2022 ஆம் ஆண்டில் பொருளாதாரம் பாரதூரமாக சுருங்கும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டது. மொத்த தேசிய உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறையும் வீழ்ச்சியடைந்தது.இதன் காரணமாக ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்தது. 2019 ஆம் ஆண்டு 183.61 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 2022 ஆம் ஆண்டு 363.11 ரூபாவாக மாற்றமடைந்தது. 2019 ஆம் ஆண்டு 3.53 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் 2022 ஆம் ஆண்டு 70 வீதமாக உயர்வடைந்தது.

நாடு வளர்ச்சியடையும் வேகம் குறைவடைந்த போது நாடு சரிவடையும் வேகம் அதிகரித்தது. வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க வேண்டுமாயின் நாம் செய்ய வேண்டியது நாடு வீழ்ச்சியடையும் வேகத்துக்கு வேகத்தடைபோட்டு நாடு வளர்ச்சியடையும் வேகத்தை அதிகரித்தல் ஆகும்.

நாம் ஆரம்பித்து விட்டோம்..

மீளவும் மீண்டெழும் கடினமான முயற்சியை ஆரம்பித்து, நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தோம். அப்போது நாடு மிகவும் பலவீனமான நிலையில் காணப்பட்டது. பேச்சுவார்த்தைகளை நடத்தும் போது எமது பலவீனமான நிலைமை எமக்கு பாரிய பிரதிகூலமாக அமைந்தது. அனைத்து கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு நாட்டை மீண்டும் வழமைநிலைக்கு கொண்டு வருவதற்கு நாம் பாடுபட்டோம். மீண்டும் ஒருமுறை மக்கள் வரிசைகளில் கஷ்டப்படும் ஒரு யுகம் உருவாகாமல் இருப்பது எமது எதிர்பார்ப்பாக காணப்பட்டது.

அந்த நோக்கத்தின் அடிப்படையில் நாம் பின்பற்றிய தேரவாத சந்தைப் பொருளாதார வழிமுறை வெற்றியளித்துள்ளது என்பதனை இன்று முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

எளிதாகும் வாழ்க்கைச் சுமை

நாம் வாழ்க்கைச்சுமையை எளிதாக்குவது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் மூலமே. அவ்வாறின்றி பிரசித்தி பெறுவதை எதிர்பார்த்து வெளிநாட்டுக் கடன் பெற்று உங்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலமாக அல்ல. அவ்வாறான நிவாரணங்கள் தற்காலிகமானதே.

எமது வேலைத்திட்டம் காரணமாக 2022 இல் 70 வீதமாக இருந்த பணவிக்கம் 2024 ஜூலை மாதம் 2.81வீதம் வரை வீழ்ச்சியடைந்தது. நானூறு ரூபாவை அடைவதற்கு நெருங்கியிருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபாவை விட குறைந்த மட்டத்துக்கு தற்போது வந்தள்ளது.

2022ஆம் ஆண்டு 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 470 ரூபாவாகும். தற்போது அதன் விலை 344 ரூபாவாகும்.

அன்று ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 460 ரூபாவாகும். இன்று அதன் விலை 317 ரூபாவாகும். மின் கட்டணங்கள் குறைந்து செல்கிறது. நீர் கட்டணங்களும் வீழ்ச்சிடைந்து செல்கிறது.

இதன் காரணமாக வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. எமது நாடு மீண்டும் வழமை நிலைக்கு வந்துள்ளது.

பொருளாதாரம் வலுவடைந்து செல்லச் செல்ல உங்களது வாழ்க்கைச் செலவை மேலும் எளிதாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் குறுகிய காலத்தில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் தொடர்பில் சலுகை வழங்குவதற்கும் எம்மால் முடியும்.

வரிச் சுமைக்கு நிவாரணம்

2015ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த அரச நிதி மறுசீரமைப்புக்கள் 2019ஆம் ஆண்டு அப்போதைய அரசினால் இடைநிறுத்தப்பட்டன. நினைத்த விதத்தில் வரிகள் விலக்கப்பட்டன. அரச வருமானம் உலகின் ஆகக் குறைந்த மட்டத்துக்கு வீழ்ச்சியடைந்தது. எமது நாடு பொருளாதார ரீதியில் வீழ்வதற்கு அதுவும் ஒரு பிரதான காரணமாக அமைந்தது.

இதிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காகவே நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்தோம்.

16 தடவைகள் அவர்களது இணக்கப்பாட்டை மீறிய வங்குரோத்து நிலையை அடைந்த ஒரு நாடு என்ற ரீதியிலேயே நாம் இம்முறை அவர்களிடம் சென்றோம். அந்த நேரத்தில் பேரம் பேசும் அதிகாரமோ பலமோ எம்மிடம் காணப்படவில்லை. நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் விதிக்கின்ற அரச வருமானம் தொடர்பான நிபந்தனைகளுக்கு இணங்குவதற்கு நேரிட்டது.

அதன் காரணமாகத் தான் வரி விதிக்க நேர்ந்தது. அது நாம் விரும்பி மேற்கொண்ட ஒரு விடயம் அல்ல. ஆயினும் அச்சந்தர்ப்பத்தில் வேறு மாற்றுவழிகள் காணப்படவில்லை.

இந்த வரி காரணமாக விசேடமாக வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர் போன்ற தொழில்சார் நிபுணத்துவம் கொண்ட நபர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

ஆனாலும் எமது பொருளாதாரத்தை ஒழுக்க ரீதியில் வழிநடத்தி பலமான நிலைமைக்கு கொண்டு வருவதற்கு எம்மால் தற்போது முடிந்துள்ள காரணத்தால் வரி நிபந்தனைகள் தொடர்பில் மீண்டும் கருத்திற் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டை நாம் பெற்றுக் கொண்டோம்.

அதன் பிரகாரம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வரி நிலைகளுக்கு இடையிலான இடைவெளியை விரிவாக்குவதற்கும் வரி வீதங்களை திருத்துவதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எம்மால் துரிதமாக எடுக்க கூடியதாயிருக்கும்.

இதற்கு மேலதிகமாக தொழில்சார் நிபுணத்துவம் கொண்ட நபர்களுக்கு வரி விடுதலை சேவை ஊக்குவிப்புக் கொடுப்பனவு செலுத்துவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

அதேபோல் இடைக்கால வரிகள் காரணமாக பலர் கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ள காரணத்தால் நாம் படிப்படியாக இடைக்கால வரிகளை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம்.

எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் இப்பணிகளைப் பூர்த்தி செய்து வரி செலுத்தும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகளின் பிரகாரம் எதிர்வரும் ஆண்டு முதல் எமது வரி வருமானத்தை மொத்த தேசிய உற்பத்தியின் 14 வீதம் வரை அதிகரித்தல் வேண்டும்.

வரி வலையமைப்பை விரிவாக்குவதன் மூலம் மற்றும் வருமானச் சேகரிப்பை மிகவும் செயற்திறனாக் குவதன் மூலம்நாம் வரி வருமானத்தை அதிகரிப்போம்.

பொருளாதாரத்துக்கு வலு சேர்ப்பதற்காக பங்காற்றும் தொழில் முயற்சியாளர்கள் வரிச்சுமை காரணமாக தேவையற்ற நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

எமது பொருளாதாரம் மிகவும் வலுவடையும் போது அவர்களின் வரிச்சுமையை எளிதாக்குவதற்குரிய பின்னணி ஏற்படும். அவர்களுக்கு சலுகை வழங்கும் செயன்முறையை நாம் 2025 இல் ஆரம்பிப்போம்.

தாய்லாந்து மற்றும் வியட்நாமை நோக்குவோம்

ஒரு மஹாயான பௌத்த நாடாக உள்ள வியட்நாம் இங்கு எமக்கு சிறந்ததொரு உதாரணம் ஆகும்.1990 ஆம் ஆண்டளவில் எமது பொருளாதாரக் கொள்கையைத் தான் வியட்நாமும் பின்பற்றியது. ஆயினும் 1995 ஆம் ஆண்டு வியட்நாம் தாய்லாந்து முறையை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டது. அதன் பிரதிபலனை தற்போது காணக்கூடியதாக உள்ளது.

மொத்த தேசிய உற்பத்தி

ஆண்டு இலங்கை வியட்நாம் 1990 08 பி.அ.டொ 6.5 பி.அ.டொ 2023 84.4 பி.அ.டொ 429 பி.அ.டொ தாய்லாந்து மற்றும் வியட்நாம் தொங்குபாலப் பயணத்தை வெற்றியடையச் செய்து கொண்டன.

எமது பயணத்தை வெற்றியடையச் செய்ய நாம் ஆரம்பித்துள்ளோம்.

அதே போல் இனிமேல்

• அரச கொடுப்பனவுகளின் நிலுவைத் தொகைகளை மூன்று மாதங்களுக்கு மேல் நிறுத்தி வைப்பதற்கு அனுமதி இல்லை.

• வரவு செலவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக மத்திய வங்கி மூலம் நாணயத்தாள்கள் அச்சிடுவது முழுமையாக தடை செய்யப்படும்.

• மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகள் அதற்காக செலவழிக்கப்படும் தொகையினை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படல் வேண்டும். மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடையுமாயின் உடனடியாக மற்றும் நேரடியாக திறைசேரி மூலம் அதற்காக நிதி வழங்கப்படல் வேண்டும்.

• சமூக பாதுகாப்புக்காக செலவு செய்யப்படும் தொகையை குறித்த அளவினை விடக் குறைத்தல் கூடாது.

இந்த இலக்குகள் மற்றும் வரையறைகள் நிலையானது ஆகும். அவை பற்றி மீண்டும் கலந்துரையாடுவதற்கு அல்லது மாற்றுவதற்கு இயலாது.

மேற்குறிப்பிடப்பட்ட இலக்குகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டே எமது உத்தியோகபூர்வ கடன் கொடுநர்கள் மற்றும் சீனா நிவாரணங்களை எமக்கு வழங்கியது.

அந்த இலக்குகள் மற்றும் வரையறைகளைப் பூர்த்திசெய்ய இயலாது போனால் எமக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மட்டுமின்றி கடன்சலுகைகள் அனைத்தும் இல்லாது போகும்.

அவ்வாறு இடம்பெறுமாயின் எமக்கு தொங்குபாலத்தில் இருந்து மீண்டும் பள்ளத்தில் வீழ்வதற்கு நேரிடும்.

தேர்தல் காலங்களில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த உண்மையை மறைத்து பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை உங்களுக்கு வழங்குவார்கள். ஆனாலும் அவை நடைமுறை சாத்தியம் அற்றவை.

அவை தங்க முட்டையிடும் கோழியின் வயிற்றை கிழித்த கதை போலத் தான். இதனால் தான் அந்த எந்தெவோரு கட்சிக்கு அல்லது அபேட்சகருக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பகிரங்க கலந்துரையாடலுக்கு வர முடியவில்லை.

சுகபோகம் நிறைந்த ஒரு நாட்டை நோக்கி..

எமது திட்டம் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட உற்பத்தி மற்றும் சேவையை மையப்படுத்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துவது ஆகும்.

பொருளாதாரத்தைப் பலப்படுத்தாது போனால், நாட்டின் வேறு எந்தவொரு துறையையும் மேம்படுத்த முடியாது. பட்டினியால் வாடும் ஒரு நாட்டுக்கு ஆன்மீக விருத்தியை அடைந்து கொள்வதற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லை. பட்டினியால் வாடும் நபர் ஒருவருக்கு போதனைகள் மூலம் எந்தவொரு பயனும் கிடைக்காதென புத்த பெருமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்திட்டத்தினூடாக முன்னோக்கிச் செல்லாவிடின் இன்னும் சில ஆண்டுகளில் நாம் பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்கு மீண்டும் ஆளாவோம். இதே பாதையில் முன்னொக்கிச் செல்வதன் மூலம் மாத்திரம் தான் அதனைத் தடுப்பதற்கு முடியும். சதாவும் உலகத்திடம் கடன் பெற எம்மால் முடியாது. கடன் பொருளாதாரம் ஒன்றின் மூலம் நாட்டை உயர்வான இடத்துக்கு கொண்டு செல்ல முடியாது. இப் பயணம் முன்னோக்கி நகருமாயின் நாம் 2048 இல் கடனற்ற, அபிவிருத்தியடைந்த ஒரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

வறுமையற்ற ஒரு சந்ததியினர்

கொவிட்19 தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக எமது நாட்டு மக்களில் 25% சதவீதத்தினர் பல்வேறு வறுமை நிலைக்கு ஆளாகியுள்ளனர். வசதிவாய்ப்புக்கள் இல்லை.

சரிவர கல்வியை பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் இல்லை. சுத்தமான நீர் இல்லை. மின்சாரம் இல்லை. தொழில்கள் இல்லை. வீடுகள் சொத்துக்கள் இல்லை. திருமணம் முடித்து குடும்பம் மற்றும் பிள்ளைகளைக் கட்டிக்காப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை.

நாம் இந்த நிலைமையை மாற்றுவதற்கு முன்னுரிமை வழங்குவோம். எதிர்வரும் 05 ஆண்டு காலத்துக்குள் இவ்வாறான துன்பங்கள் மூலம் கஷ்டப்படும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களை 10 வீதம் வரை குறைப்பதற்கு நாம் செயற்படுவோம். அதற்கான அடித்தளத்தை வழங்கி சமூகப் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையை நாம் தயாரித்துள்ளோம்.

வறுமை நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்றும் வேலைத் திட்டத்தை மிகவும் முறைசார்ந்த ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்வோம். அதற்காக ‘அஸ்வெசும’மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டம் ஆகியன ஒன்றிணைக்கப்படும்.

கடும் வறுமை நிலை மற்றும் சமூக ரீதியில் துன்பப்படும் பல சமூகக் குழுக்கள் இனம் காணப்பட்டள்ளன. பிரதேச அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் நிரந்தர பங்குதாரர்களாக இந்த வறுமையான குடும்பங்கள் ஈடுபடுத்தப்படும். பிரதேச உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அரச பணிகளில் ஊழியர்களை ஈடுபடுத்தும் போது இவ்வாறான சமூகக் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதன் மூலம் அவர்களின் பொருளாதாரத்தை வலுவடையச்செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அவ்வாறான சமூகக் குழுக்களுள்ள பிரதேசங்களை அடையாளம் கண்டு வறுமையை ஒழிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பொருந்தும் வகையில் அப்பிரதேசங்கள் மீது விசேட கவனம் செலுத்தப்படும்.

அழகான 2048 இற்கு.

நாம் உருவாக்கும் தேரவாத வர்த்தக பொருளாதாரத்தின் மூலம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் போதுமான அளவு வாழ்க்கைத் தரத்தை உறுதிசெய்வோம்.

இப் பயணப்பாதையினூடாக உயர்வான போட்டித்தன்மை, ஏற்றுமதியைமையமாகக் கொண்ட டிஜிட்டல் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு முடியும் என்பதுடன் 2048இல் எமது அனைத்து பொருளாதார இலக்குகளையும் அடைந்துகொள்ள முடியும். இந்த அபிவிருத்தியடைந்த யுகத்தை நோக்கிப் பயணிப்பதற்குத் தேவையான பரிமாற்றத்துக்கு அடிப்படையாக அமையும் பிரதான சட்டங்களை நாம் தற்போது அங்கீகரித்து நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

மத்திய வங்கி சட்டம், அரச நிதி முகாமைத்துவ சட்டம், அரச கடன் முகாமைத்துவ சட்டம் மற்றும் பொருளாதார பரிமாற்ற சட்டம் அவற்றுள் முக்கியமானவை ஆகும்.

இதன் மூலம்,

I .புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதுடன் அதன் மூலம் தொழிற்சந்தை விரிவுபடுத்தப்படும். வருமானம் உழைக்கும் புதிய சந்தர்ப்பங்கள் உருவாக்கம் பெறும்.

II. வருமான உழைப்பு உயர்வடையும்.

பொருளாதாரத்தின் கூடுதலான சுமையினை தனியார் துறை மீது சுமத்துவதன் மூலமாகவே உலகின் பல நாடுகள் வளர்ச்சியடைந்துள்ளன. நாம் உருவாக்கும் தேரவாத சந்தைப் பொருளாதாரத்தை அதனை விடவும் பரந்தளவில் தாபிப்பதற்கு நாம் திட்டமிடுவோம்.

பலம் பொருந்திய தனியார் துறையுடன் தோளோடு தோள் நின்று போட்டியிட முடியுமான இரண்டு துறைகளும் எமது பொருளாதாரத்துடன் ஒன்று சேர்க்கப்படும்.

I அரச துறை

ஒட்டுமொத்த பொருளாதார முறைமையினையும் முழுமையாக ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசுக்கு உரியதாகும். அரசுக்குச் சொந்தமான வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில்முயற்சிகள் மூலம் இந்த நிதி ரீதியான வழிநடாத்தல் போட்டித் தன்மையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

II. மக்கள் துறை

மக்கள் துறை எனும் புதிய எண்ணக்கருவுக்காக அரசியலமைப்பின் 27(2)(ஊ) ஆம் உறுப்புரை அடிப்படையாகக் கொள்ளப்படும்.

“உற்பத்தியின், விநியோகத்தரின் மற்றும் பரிமாற்றம் செய்யும் மார்க்கங்கள் அரச, அரச நிறுவனங்கள் அல்லது வரப்பிரசாதம் கிடைக்கப்பெற்ற ஒரு சிலரின் கையில் அல்லது குவிக்கப்படாது மற்றும் மையப்படுத்தப்படாது இலங்கையின் அனைத்து மக்கள் மத்தியில் விரிந்து செல்லும் ஒரு தார்மீக சமூக முறையைத் தாபித்தல்”

மக்கள் துறை பொருளாதாரத்தின் பலம் மிக்க ஒரு பங்கை வகிப்பதற்காக நாம்

• அனைத்து பிரஜைகளுக்கும் காணி அல்லது வீடு ஒன்றின் உரிமையை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவோம்.

• தேசிய சொத்து (National Wealth Fund) வளத்தைத் தாபிப்போம்.

• கூட்டுறவுத் தொழில்முயற்சியை பூரண மறுசீரமைப்புக்கு உட்படுத்துவோம்.

சொத்துக்களின் உரிமை

பிரசைகளுக்கு உரிமையை வழங்கும் வேலைத்திட்டத்தை முறைமைப்படுத்தல் மற்றும் துரிதப்படுத்துவதற்காக புறம்பான அதிகார சபை ஒன்று உருவாக்கப்படும்.

இதனூடாக ‘உருமய’ நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் 02 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு காணி உரித்துக்களை வழங்குதல் மற்றும் கொழும்பு நகரத்தின் அரசாங்கத்துக்குச் சொந்தமான குறைந்த வருமானம் பெறும் நபர்களின் வீட்டு உரிமையை அவ்வீட்டின் உரிமையாளர்களிடமே ஒப்படைத்தலை 04 ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்வோம்.

மத்திய தர வகுப்பினருக்கு வீடு கட்டுவதற்காக சலுகைக் கடன் வழங்கப்படும். வருமானம் குறைந்தவர்களுக்கு தொடர்மாடி வீடுகளை உரித்தாக்குவதற்கான வசதிகள் வழங்கப்படும்.

பெருந்தோட்டதொழிலாளர்களுக்காக புதிய கிராமங்கள் உருவாக்கப்படுவதுடன் லயன் விடுகளில் குடியிருக்கும் நபர்களுக்கு காணி ஒன்றுக்கான உரித்து வழங்கப்படும்.

எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டின் கீழ் பல புதிய வீட்டுத்திட்ட முன்மொழிவுகள் அரச துறையின் தலையீட்டுடன் நிர்மாணிக்கப்படுவதுடன் நாட்டின் அனைத்து நகரங்களும் உள்ளடங்கும் வகையில் பல மாடிகளைக் கொண்ட வீடுகளை நிர்மாணிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

இதன் காரணமாக தற்போது வீழ்ச்சியடைந்துள்ள நிர்மாணத்துறைக்கு கைத்தொழிலை சுமார் இரண்டு வருட காலத்திற்குள் மீண்டும் பலப்படுத்துவதற்கு வழி பிறக்கும்.

நிதி உரிமை

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சபை அங்கத்தவர்களுக்கு தற்போதுள்ளதை விடவும் பலமான தொழிற்சங்க பிரதிநிதித்துவம் வழங்கப்படும். வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் அதில் இணைக்கப்படுவர். அதன் மூலம் மிகவும் சிறந்த நிதி நிர்வாகம் உறுதி செய்யப்படும்.

தற்போது அரச தேவைகளுக்காகவே இந்த நிதியம் ஈடுபடுத்தப்படுகிறது. அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் திறைசேரி பிணை முறிகளுக்காக இந்த நிதியம் பெற்றுக் கொள்ளப்படுகிறது.

நாம் அந்த நிலைமையை மாற்றியமைப்போம். பொருளாதாரம் பலமடையும் போது, அரச பணிகளுக்காக இந்த நிதியம் பயன்படுத்தப்படுவது ஆகக் குiறைந்த மட்டத்துக்கு கொண்டுவரப்படும்.

அதன் மூலம் இந்த நித்தியத்தை கூடுதலான வருமானம் பெற முடியுமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். 2030 ஆம் ஆண்டளவில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் ஆகியன எமது நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு நிதியமாக மாற்றமடையும். இதன் மூலம் நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு கூடுதலான பிரதிபலன்களை அடைந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும்.

• தேசிய சொத்து வளம் ((National Wealth Fund)

வரவு செலவு மிகை மற்றும் அரச நிறுவனங்களின் இலாபங்களை ஒன்று சேர்த்து தேசிய சொத்து வளம் தாபிக்கப்படும். உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்குச் சந்தைகளில் இந்த நிதி முதலீடு செய்யப்படும்.

• கூட்டுறவு

சர்வதேச தரங்களின் பிரகாரம் மற்றும் போட்டித் தன்மை வாய்ந்த சவால்களுக்கு முகம் கொடுக்க கூடியவாறு கூட்டுறவுத் தொழில்முயற்சி முழுமையான மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும். கூட்டுறவு முகாமைத்துவத்துக்கு அரசியல் மற்றும் அரச தலையீடுகள் மேற்கொள்ள முடியாதவாறு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.ஸ்கெண்டினேவிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் கூட்டுறவு மாதிரியை ஒத்த புதிய கூட்டுறவு சட்டவிதிக் கோவை ஒன்றை அங்கீகரித்து கூட்டுறவு தொழில்முயற்சி தற்போதைய போட்டித் தன்மைக்கு முகம் கொடுக்க முடியுமான பலமான நிலைக்கு தரமுயர்த்தப்படும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division