சுமைதூக்க
எண்ணிலா இயந்திரங்கள்
என்றாலும்
தந்தை போல்
சுமைதாங்க வராது
உலக முடியும் வரை
மனைவியின் வலியில்
ஆரம்பிக்கும் அலறல்
பம்பரமாய் சுற்றி
தலைகால் விளங்காது
வைத்தியசாலை சேர்த்து
குழந்தையின் அழுகைக்காய்
கண் மூடாமல்
தந்தை நாமத்திற்காய்
காத்திருக்கும்
காந்தி மகான் தந்தை
முதல்ப் பாரமாய்
பெற்ற குழந்தையை
கையிலேந்தியது
பாரமில்லை என்றாலும்
ஆவி போல் நெஞ்சில்
உள்நுழைந்தது
பாரம் என்று
ஓர் மூலையில்
உட்கார்ந்திருந்தது
தாயும் சேயும்
வீடுவர சொகுசு வாகனம்
தேடும் துன்பம், இன்பம்
அந்நேரத்தில்
காற்றுப்படா வாகனமும்
கண் திருஷ்டிக்கு
பொருட்களுடன்
வீடு வந்த
பேரின்பக்காரன்
தந்தை
தாயின் வாந்தியால்
உடம்பில் ஆகாரமின்றி
குழந்தையின்
பால் பசி போக்க
மனைவிற்கு
பாலில்லை என்று
குளத்து மீனும்
தேடும்
தந்தை அவன்
ஒப்பற்ற நடமாடும்
சுமைதூக்கி
சுமை தூக்கி
66