அல்லாஹ் பார்த்துக்
கொண்டிருக்கின்றான்…
நாம் பொறுமையோடு
இருக்கின்றோம்….
பொறுமையும் ஒரு
சோதனை தான்…
அக்கிரமக்காரர்களின் அழிவு
வெகு தூரத்தில் இல்லை…
சாந்தியும் சமாதானமும்
கருணையும் இரக்கமும்
அவர்கள் உள்ளத்தில்
செத்துப் போய்விட்டது….
பாலைவனத்திலும்
புல் முளைக்கும்…
இருண்டு போன உள்ளங்களில்
வறண்டு போனது ஈவிரக்கம்…
சிதறி கிடக்கும் உடல்களையும்
கை கால்களையும்
நான் கண்களால் கண்டேன்..
என் கண்கள் கூட ஒளி இழந்தன…
சிதறிய உடல் துண்டுகள்
நாளை மறுமையில் ஒளிக்கீற்றுகளாக…
கஸ்தூரி வாடை வீசும்
சுவர்க்கவாசிகளாக….
நான் ஒரு கனவு கண்டேன்..
கனவில் தெரிந்தது புதிய உதயம்…
உதயத்தின் வெளிச்சத்தில்
பலஸ்தீன் மண்ணிலே
பூத்துக் குலுங்கும்
சமாதான வெள்ளை மலர்கள்….
பலஸ்தீன் மறுபடியும்
பீனிக்ஸ் பறவை போல
எழுந்து நிற்கும்…
எமக்கு இது பிரார்த்தனை காலங்கள்…
எம் பிரார்த்தனைகள் யாவும்
வெற்றியின் கோலங்கள்…
அல்லாஹ் எம்மை
கைவிடமாட்டான்…
அல்லாஹ் எம்மை
கைவிடமாட்டான்…
துணிந்து நிற்போம்!!
–