யாழ்ப்பாணம், நல்லூரில் எழுந்தருளி இருக்கும் நல்லூர்க் கந்தன் கோயில் வருடாந்த மஹோற்சவ தேர் திருவிழா இன்று மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. தேர் திருவிழாவில் ஆறுமுகப் பெருமான் கஜாவல்லி, மஹாவல்லி சமேதராய் ஸ்ரீசண்முக பெருமானாக எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலிப்பார்.
கடந்த ஓகஸ்ட் 9ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவ திருவிழா, நாளை தீர்தோற்சவம் மற்றும் துவஜாவரோண உற்சவத்துடன் நிறைவு பெறும்.
நல்லூரில் கொடியேற்றம் முதல் தீர்த்த திருவிழாவரை நடைபெறும் விழாக்களுக்கான தத்துவங்கள் பண்டைய நூல்களில் இடம்பிடித்துள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக நல்லூரில் அமர்ந்து அருளாட்சி புரிகின்ற ஸ்ரீசண்முக பெருமான், பழனி சந்நிதானத்தில் இருக்கின்ற தண்டாயுதபாணி, வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி, மூலவராக அமர்ந்து அருளுகின்ற வேலவர், காவல் கடவுளான வைரவப்பெருமான் மற்றும் நல்லூர் தேரடி என்பன மாண்பும் மகிமையும் மிக்கவையாகும்.