உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் இலங்கையின் ‘தினகரன்’ நாளிதழ் மற்றும் ‘தினகரன் வாரமஞ்சரி’ வார இதழ் ஆகியவற்றுக்கு தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சர் டி.கே.சேகர் பாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்ற போதே அவர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
பழனியில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பான பல்வேறுபட்ட செய்திகளை ‘தினகரன்’ நாளிதழ் மற்றும் ‘தினகரன் வாரமஞ்சரி’ வார இதழில் வௌியிட்டு, உலக அரங்கில் அந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு பணியாற்றியமைக்காகவே இப்பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் தினகரன் பத்திரிகையில் கடமை புரியும் திருமதி ஆர்.வயலட் மற்றும் இலங்கை முன்னணி தமிழ் நூல்களின் பதிப்பாசிரியர் எச்.எச்.விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்த போது அவர் தினகரன் பத்திரிகையை வாசித்து தனது வாழ்த்து மற்றும் பாராட்டை நேரடியாக தெரிவித்துள்ளார்.