Home » இலங்கையின் எதிர்காலத்தை மாற்றும் COMPLAST & RUBEXPO 2024

இலங்கையின் எதிர்காலத்தை மாற்றும் COMPLAST & RUBEXPO 2024

by Damith Pushpika
September 1, 2024 6:28 am 0 comment

முழுமையான பிளாஸ்டிக் பொருட்கள் கண்காட்சி மற்றும் இறப்பர் எக்ஸ்போ (COMPLAST & RUBEXPO 2024) நிகழ்வானது ஓகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றது.

SMART Expos & Fairs India Pvt Ltd மற்றும் இலங்கை பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் நிறுவகம் (PRISL) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வுக்கு Industrial Development Board (IDB) ஆதரவு வழங்கியது. Shibaura Machine India, SDD Polymers, Lanka IOC, FMJ Plastics, Acteil Innovative மற்றும் NCS Holdings ஆகியன இந்நிகழ்வின் பிரதான அனுசரணையாளர்களாகும்.

மூன்று நாட்கள் இடம்பெறும் இக் கண்காட்சியில், பிளாஸ்டிக், இறப்பர் மற்றும் பொதியிடல் உள்ளிட்ட துறைகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த இரட்டைக் கண்காட்சிக்கு வருகை தந்திருந்தோர், பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் தொழிற்துறைகளின் நவீன தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்கங்கள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன், அதிநவீன தீர்வுகளின் பல்வேறு நேரடி விளக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வுகள் நாட்டின் நீண்ட கால இலக்குகளான வட்டப் பொருளாதாரங்கள் மற்றும் பேண்தகு அபிவிருத்தி ஆகியவற்றுடன் பெரிதும் ஒத்திசையும் மீள்சுழற்சியில் கவனம் செலுத்துகின்றன.

சூழல் மீதான தாக்கத்தைக் கட்டுப்படுத்துதல், கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்தல், வளங்களைப் பாதுகாத்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் சூழலுக்கு ஏற்ற தொழில்கள் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் உட்பட பல இலங்கைக்கான நன்மைகளை வட்டப் பொருளாதாரம் கொண்டுள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division