இந்த நாட்டிற்கு அயராது சேவை செய்த தேசத்தின் ஓய்வூதியர்களின் நல்வாழ்வை ஆதரிப்பதனையும் சூழல்நேய சக்தி தீர்வுகளை ஊக்குவிப்பதனையும் நோக்கிய முக்கிய முன்னெடுப்பாக, NDB வங்கியானது ஹேலிஸ் சோலார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்றில் ஆகஸ்ட் 22 ஆம் திகதி கைச்சாத்திட்டது. “ஆச்சாரா ஓய்வூதியம் பெறுவோர் கடன் திட்டத்தின் கீழ் சோலார் வசதிகள்”, திட்ட அங்குரார்ப்பணத்தின்போது NDB வங்கியானது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்ட நிலையில் இதுசிரேஷ்ட பிரஜைகளிற்கு நிதித் தீர்வுகளை வழங்குவதிலான வங்கியின் அர்ப்பணிப்பை மாத்திரமின்றி நிலைபேண் வாழ்முறைக்காக ஒலிக்கும் அதன் முயற்சியையும் வெளிப்படுத்துவதாகவுள்ளது.
வங்கிக்கும் ஹேலிஸ்க்கும் இடையிலான உத்தியோகபூர்வ பங்காளித்துவத்தைக் குறிக்கும் வகையில் அமைந்த இக்கைச்சாத்திடும் நிகழ்வு ஓய்வூதியப்பணிப்பாளர் உட்பட NDB மற்றும் Hayleys ஆகிய இரு நிறுவனங்களினதும் முக்கிய பிரதிநிதிகள் முன்னிலையில் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.
நாட்டிற்காக பல வருடங்கள் அர்ப்பணிப்பான சேவை ஆற்றிய ஓய்வூதியம் பெறுவோர் இலங்கையின் சமூக கட்டமைப்பில் முக்கிய பங்கை வகிக்கின்றனர்.
அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் NDB வங்கியானது, அவர்கள் சௌகரியமானதும் சுற்றுச்சூழல் உணர்வுடையதுமான ஓய்வில் வாழ்வதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தனித்துவமான கடன் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் சூரிய சக்திக்கான தங்கள் மாற்றத்தை தடையின்றியும் மற்றும் நியாயமான விலையிலும் ஏற்படுத்தவென வடிவமைக்கப்பட்ட பன்முக பயன்களிலிருந்தும் நன்மைகளைப் பெற, இலங்கையில் ஓய்வூதியத் திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து ஓய்வூதியர்களும் தற்போது இந்த சூரிய சக்தி [சோலார்] கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.