சுப்ளெக்ஸ் ஆசியா ப்ரைவேட் லிமிடெட் நிறுவனமானது 2024ஆம் ஆண்டின் ஏன்ட்ரோப்ரினர் பிஸ் வணிக விருதுகளில் நெட்வொர்க் மார்கெட்டிங் பிரிவில் தங்க விருதைப் பெற்று தன்னிகரற்ற சாதனையை அடைந்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற இந்த விருது விழாவானது, நெட்வொர்க் மார்கெட்டிங் துறையில் நிறுவனத்தின் அவதானத்துடனான செயல்திறனையும் புதிய சிந்தனையையும் அங்கீகரித்துள்ளது.
இந்த விருது நிறுவனத்தின் இயக்குனர்களான, நவநீதராஜா மற்றும் அனஸுக்கும் நிர்வாக இயக்குனரான, செல்லையா சரிதாவுக்கும் வழங்கப்பட்டது.
அவர்கள் வழங்கிய தலைமையும், மூலோபாய சிந்தனைகள், இந்த வெற்றியைப் பெறுவதில் முக்கிய பங்கு வகித்தன.
இந்தத் துறையில் மிகச் சிறந்த மற்றும் வெற்றியடைந்த நிறுவனமாக இருக்கவும், மக்களுக்கு சிறந்த தயாரிப்புகளை வழங்கி, பொருளாதார பலமிக்க சந்ததியை உருவாக்கும் நிறுவனத்தின் நோக்கத்திற்கும் இந்த விருதானது மிக முக்கியமானதாக உள்ளது.