ஒருகாலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிச் செய்தியில் ஒலிபரப்பப்படும் இசை மறக்க முடியாத ஒன்றாகும். “ எம்மால் முடியுமா அரசாங்கத்தைக் கவிழ்க்க” என்ற அர்த்தமே அந்த இசையில் இருப்பதாக சிலர் கூறினர். அந்தக் கதையை மாற்றி இன்று கூற இருப்பது “மக்கள் கூட்டத்தால் முடியுமா அரசாங்கத்தைக் கவிழ்க்க” என்றேயாகும். இப்போதெல்லாம் அனைத்துக் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பெரிய மக்கள் கொண்ட கூட்டங்களை நடாத்துகின்றன. மக்களைக் காட்டி, மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தி ஆட்சி அதிகாரத்தை பெற்றுவிடலாம் என பெரும்பாலானோர் நம்புகின்றனர். எனினும் உண்மை அதுவல்ல.
பிரமாண்டமானது எனக் காட்டும் அனேக கூட்டங்களில் உண்மையிலேயே பெருமளவிலான மக்கள் கூட்டம் இல்லை. சிறியளவிலான ஒரு மைதானத்தைத் தெரிவு செய்து அதனை நிரப்புமளவு மக்களைக் கொண்டு வந்து நடாத்தப்படும் மக்கள் கூட்டங்களின் புகைப்படங்களை வெளியிடுவது புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியாகும். மக்கள் விடுதலை முன்னணி தங்காலையில் நடாத்திய பொதுக் கூட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள் எனக் கூறப்பட்டாலும், உண்மையிலேயே அவ்விடத்தில் இருபதாயிரம் பேரைக் கூட நிறுத்த முடியாது. ஐயாயிரம் மக்களைக் கொண்ட கூட்டத்தை ஒரு இலட்சமாகக் காட்டுவதற்கு அந்தக் கூட்டத்தை நடத்தும் விளையாட்டு மைதானத்தையோ அல்லது இடத்தையோ மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதன் பின்னர் செய்ய வேண்டியது ட்ரோன் கெமராவைப் பயன்படுத்தி பிரமாண்டமாக மக்கள் கூட்டம் எனக் காட்டுவதேயாகும். மறுநாள் ஐக்கிய மக்கள் சக்தி தனது முதலாவது கூட்டத்தை குருநாகலில் நடாத்தியது. அந்த மைதானம் நிரம்புமளவுக்கு சுமார் பத்தாயிரத்திற்கும் குறைவானவர்களையே நிறுத்த முடியும்.
எனினும் அவர்கள் எடுத்துக் காட்டியது இலட்சக்கணக்கான மக்கள் அலை திரண்டிருந்தது என்றாகும். இந்த நகைச்சுவையான படங்களின் உண்மைத் தன்மை தெரியவருவது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னராகும்.
77 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தும் வரைக்கும், அப்போதிருந்த ஸ்ரீமாவோ அம்மையாரின் அரசாங்கம் நாடு முழுவதும் பெரும் மக்கள் பங்கேற்புடன் கூட்டங்களை நடத்தியது. அதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 70களில் பஸ்கள் மூலம் கூட்டத்தை சேர்க்க ஆரம்பித்தது 70ஆம் ஆண்டு அரசாங்கம்தான் என்பதோடு, இலத்திரனியல் ஊடகங்கள் இல்லாத அந்தக் காலத்தில் பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்ப மக்களைக் காட்டி கூட்டம் தங்களுடன் இருப்பதாக காட்ட அரசு முயன்றது. எனினும் அதற்குப் பதிலாக அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி கடைபிடித்தது தனியான நடைமுறையையாகும்.
ஜே.ஆர் என்பவர் ஒரு புதுமையான மனிதராகும். எதிர்ப்பைக் காட்டுவதற்கான பாதயாத்திரையைப் பயன்படுத்துவதை ஆரம்பித்தது அவராகும். பண்டாரநாயக்க ஆட்சி செய்த காலத்தில் கண்டிக்கு பாதயாத்திரை சென்ற ஜே. ஆர். 70 – 77 காலத்தில் நாடு முழுவதிலும் சத்தியக்கிரகங்களை நடத்தினார்.
எனினும் அப்போதைய அரசாங்கம் அவற்றுக்கு சிறிதும் கணக்கெடுக்கவில்லை.
பொதுக்கூட்டங்களில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டமையால் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அப்போது நினைத்தது. அதுமட்டுமின்றி, அப்போது இடதுசாரிகள் சிவப்புத் தொப்பிகளை அணிந்து கிராமங்களில் சுற்றித் திரிந்து வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் நடாத்தும் பொதுக் கூட்டங்களிலும் பெருமளவினோர் கலந்து கொண்டதோடு, இடதுசாரிக் கட்சிகள் 77ல் பெரிய அதிகாரங்களைப் பெறும் என்று முன்முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் தேர்தல் முடிவுகள் அந்த முன்முடிவுகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கியது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியடைந்து அக்கட்சி வெறும் எட்டு உறுப்பினர்களையே வெற்றி பெற்றுக் கொண்டது. இடதுசாரிக் கட்சிகள் அரசியல் களத்திலிருந்து துடைத்தெறியப்பட்டிருந்தன. ஐக்கிய தேசிய கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெற்று மிகப் பிரமாண்டமான மக்கள் ஆணையைப் பெற்றுக் கொண்டது.
இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் இந்நாட்டு சமூகத்தில் பிரசாரக் கூட்டத்திற்கு போஸ்டர்களை ஒட்டுவதற்குக் கூட முடியாத சூழல் இருந்தது.
நாடு முழுவதும் பயங்கரவாதத்தின் கை ஓங்கியிருந்தது. வேட்பாளர்கள் ஒலிபெருக்கியின் மூலமே பொதுமக்களிடம் உரையாற்றினர்கள்.
கூட்டங்களில் மக்கள் கலந்து கொள்ளவில்லை. எனினும் ரணசிங்க பிரேமதாச அத் தேர்தலில் வெற்றி பெற்றார். மக்கள் கூட்டம் கூடுமளவுக்கு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற முடியாது என்பதற்கு மிக நெருக்கமான உதாரணத்தை கடந்த ஜனாதிபதி தேர்தலிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டப்பட்டது பல்லாயிரக்கணக்கானோரை ஒன்று ஒன்று கூட்டியாகும். சில கூட்டங்களில் ஒரு இலட்சம் பேர் வரையிலும் கூட்டப்பட்டிருந்த சந்தர்ப்பங்களும் இருந்தது.
அவ்வாறானதொரு கூட்டமே அனுராதபுரத்திலும் இடம்பெற்றது. அந்நேரம் மஹிந்த ராஜபக் ஷவின் முதலாவது பிரசாரக் கூட்டம் அனுராதபுரத்தில் இடம் பெற்றதோடு அந்தக் கூட்டத்திற்கு இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த சுமார் 1200 பஸ்கள் மூலம் மக்கள் அழைத்துவரப்பட்டனர்.