அனைத்து மதங்களையும் மொழிகளையும் மக்களையும் பாதுகாக்கும் நாட்டை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறுகியகால சலுகைகள், சிறப்புரிமை களுக்காக, பதவிகளுக்காக நாட்டையோ, கட்சியையோ ஒருபோதும் காட்டிக் கொடுக்கப் போவதில்லையென்றும் நாமல் எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட மாட்டாதென்றும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டேனென சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷ, செய்யக்கூடியதை செய்ய முடியுமென்றும், செய்ய முடியாததை செய்ய முடியாதென நேரடியாக கூறுவதாகவும் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.