104
வெப்பக் காற்றில் தூது சொல்லி
ஈரக்காற்றில் தாகம் ஆற்றும்
பாலைவனத்து மரத்தின் வலியை
தண்ணீரில் வேரூன்றிய
மரங்கள் அறிவதில்லை.
நிழலுக்காய் வருபவர் கூட
நீர் ஊற்றிச் செல்வதில்லை.
மழையின் கருணையையும்
தேக்கி வைக்க
முடியவில்லை.
நான்
பாலைவனத்து தனி மரம்.
மகா மகன்