துபாயில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் 28 ஆவது மாநாட்டில் ரோட்டரி பி.எச்.எப் ஹனீக்கா ராகில் கலந்துகொண்டார். வழக்கறிஞர் ஹனீக்கா ராகில் ரோட்டரி இன்டர்நேஷனலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக அனுப்பப்பட்ட 67 விண்ணப்பங்களில் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பிரதிநிதிகளில் இவரும் ஒருவர். ஹனீக்கா கொழும்பு வடக்கு ரோட்டரி கழகத்தின் தற்போதைய தலைவராகவும் உள்ளார்.
ஹனீக்கா ராகில் கார்டிஃப் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் (யுகே) சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் (எல்.எல்.எம்) மேலும் சட்ட இளங்கலை (எல்.எல்.பி) பட்டங்கள் பெற்றவர் ஆவார். ஸ்டாஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தில் (யுகே) பட்டதாரி. அவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை மாலைதீவில் பெற்றார். சீஷெல்ஸ் குடியரசில் தனது இரண்டாம் நிலைக் கல்வியை முடித்தார்.
அவர் கடந்த 8 ஆண்டுகளாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் அமைதி மற்றும் மோதல் தீர்வு, கல்வி, காலநிலை, நீதி ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக வாதிட்டும் வருகிறார்.
மேலும் அவர் பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனத்தின் (IEP) உலகளாவிய அமைதி தூதராக நியமிக்கப்பட்டார்.