83
இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரனும், முன்னாள் அமைச்சரவை அமைச்சருமான ருக்மன் சேனாநாயக்க காலமானார்.
இவர் தனது 76ஆவது வயதில் நேற்று காலமானார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரான ருக்மன் சேனாநாயக்க, தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு அமைச்சர் பதவிகளில் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படுமென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.