70
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 812 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டு முகாமைத்துவ மையத்துக்கு 409 முறைப்பாடுகளும் மாவட்ட முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 403 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள மொத்த முறைப்பாடுகளில் தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பிலேயே 812 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.