78
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் மேற்கொண்டுள்ள கருத்துக்கணிப்புகளை நம்பி ஏமாற வேண்டாமென்று தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தமது கருத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லையென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த கணக்கெடுப்புகளின் அடிப்படையில் வாக்காளர் தங்கள் கருத்துகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படக் கூடாதென்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.