Home » 35000 மாணவர்களுக்காக திறந்த ஜனாதிபதி மாளிகையின் கதவுகள்

35000 மாணவர்களுக்காக திறந்த ஜனாதிபதி மாளிகையின் கதவுகள்

by Damith Pushpika
August 25, 2024 6:05 am 0 comment

2022 ஆம் ஆண்டு முதல் கடந்த இரண்டு வருடங்களினுள் சுமார் 35,000 பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி மாளிகை, பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகம், துறைமுக நகரம், மத்திய வங்கி, பாராளுமன்றம், தாமரைத் தடாகம் உள்ளிட்ட கொழும்பை சுற்றியுள்ள கல்வி பெறுமதிமிக்க இடங்களை இலவசமாகவே பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இந்தளவுக்கு அதிக எண்ணிக்கையான பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறான வாய்ப்பு வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலக வளாகத்தினைப் பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்கள் வருகை தரும் அனேக சந்தர்ப்பங்களில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பணிமிகுந்த சந்தர்ப்பங்கள் மற்றும் பொறுப்புக்கள் நிறைந்த நிலையிலும் மாணவர்களுடன் நட்புறவுடன் உரையாடுவது, அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத மற்றும் புத்துணர்ச்சியூட்டும் நாளாக அன்றைய தினம் அமைய வேண்டும் என்பதனாலாகும். இந்த சந்தர்ப்பங்களில், ஜனாதிபதி பழைய பாராளுமன்ற கட்டடத்தின் பௌதீக வரலாறு மற்றும் பாராளுமன்ற முறையின் பரிணாமம் தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதோடு, அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும் அறிந்துகொள்வார், விசேடமாக சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பதற்கும் அவர் மறப்பதில்லை. நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு மறக்க முடியாத மற்றும் ஊக்கமளிக்கும் நாளாக அன்றைய தினம் அமையும் வகையில், ஜனாதிபதி மற்றும் மாணவர்களின் குழுப் புகைப்படத்துடன் ஜனாதிபதி செயலகத்திற்கான விஜயங்கள் நிறைவடைகின்றன.

இதற்கு மேலதிகமாக, ஜனாதிபதி செயலகத்தில் பழைய பாராளுமன்றம் செயற்பட்ட பிரதான கேட்போர் கூடத்தில் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இதுவரைக்கும் பல பாடசாலைகளின் மாணவர் பாராளுமன்றம் மற்றும் இளைஞர் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றுள்ளன. பாடசாலை மாணவர்கள் ஜனநாயகம் தொடர்பான நடைமுறை அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், நாடு மற்றும் சமூகத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பில் மாணவர்கள் வாதப்பிரதிவாதங்கள் செய்வதற்கு களம் அமைத்துக் கொடுத்து, பல்வேறு பாடசாலைகளின் ஆரம்ப மாணவர் பாராளுமன்ற அமர்வுகளை வரலாற்று முக்கியத்துவமிக்க பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் நடத்துவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதோடு, எமது எதிர்கால சந்ததியினரில் தலைமைத்துவ குணங்கள், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்களை வளர்த்துக் கொள்வதற்கும், பிரஜைகளுடன் இணைந்து குடிமக்கள் மற்றும் பாராளுமன்றத்தையும் ஒன்றுக் கொன்று நெருக்கமாக்கும் நோக்கிலும் மாணவர் பாராளுமன்றம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தக் எண்ணக்கருவின் தனித்துவமான மைல்கல்லாக, நாடு முழுவதிலுமுள்ள பாடசாலை மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே மிகத் திறமையானவர்களைக் கொண்ட தேசிய மாணவர்கள் பாராளுமன்றம் 2024ஆம் ஆண்டு மார்ச் 26ம் திகதி ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பிரகாரம், ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயகாவின் வழிகாட்டலில் ஜனாதிபதி செயலகத்தின், முப்படைகளின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் செயற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்திற்கு இலங்கை பாராளுமன்றம், கல்வி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் போன்றன ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தன.

கொழும்புக்கு வெளியே தூர பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் மாணவர்கள் உள்ளிட்ட நாடு முழுவதிலுமுள்ள சுமார் 160 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இதுவரை இந்தக் களப்பயணத்தில் பங்குபற்றியுள்ளனர். இந்த வேலைத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division