உலகளாவிய இணையப் பாதுகாப்பு சேவை வழங்குநரான Kaspersky, ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளுக்கான தனது வருடாந்த இணையப் பாதுகாப்பு வார இறுதி அமர்வை 2024 ஆகஸ்ட் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்தியது.
இணையப் பாதுகாப்பு தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சமீபத்திய பாதுகாப்பு சவால்களை முகங்கொடுப்பது குறித்த விழிப்புணர்வை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இதில் உலகின் முன்னணி இணையப் பாதுகாப்பு நிபுணர்கள், ஊடகவியலாளர்கள், முன்னணி தொழில்துறை நிர்வாகிகள் மற்றும் பிற தொழில்வல்லுநர்கள் எதிர்கொள்ளும் கடும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் AI இன் பிரபலத்தால் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்த ஆழமான பகுப்பாய்வை Kaspersky இன் இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், Ransomware போன்ற இணையத் தாக்குதல்கள் மேலும் சிக்கலாகவும், நுணுக்கமாகவும் மாறிவருகின்றன. இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, Kaspersky நிறுவனத்தின் வல்லுநர்கள் உலகின் முன்னணி இணையப் பாதுகாப்பு நிபுணர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், முக்கிய தொழில்துறைகளில் இருந்து வந்த தலைமை அதிகாரிகளுக்கும் (CTOs) விரிவான பகுப்பாய்வுகளையும் தகவல்களையும் வழங்கினர். மேலும், தற்போதைய அச்சுறுத்தல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பரவுவதால் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.