Sadaharitha நிறுவனம், 22 ஆண்டுகள் பூர்த்தியைக் குறிக்கும் வகையில், அதிநவீன வல்லப்பட்டை தொழிற்சாலையை திறந்து வைத்துள்ளது
கடந்த இரு தசாப்தங்களில், இலங்கையின் முன்னணி, வர்த்தகரீதியான வனவியல் முகாமைத்துவ நிறுவனமாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ள Sadaharitha Plantations, இத்துறையில் தொடர்ச்சியாக புதிய தரநியமங்களை நிலைநாட்டி, வளர்ச்சியை முன்னெடுத்து வந்துள்ளது. தற்போது 22 ஆண்டுகள் பூர்த்தியைக் கொண்டாடும் இந்நிறுவனம், கடுவெலையில் அதிநவீன வல்லப்பட்டை பதனீட்டு தொழிற்சாலையை விமரிசையாக திறந்து வைக்கின்றமை குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. புதிதாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலை, Sadaharitha நிறுவனத்தின் மூலோபாய விரிவாக்க இலக்கில் முக்கியமானதொரு படியாக அமைந்துள்ளதுடன், முதலீட்டாளர்களுக்கு வலுவான பிரதிபலனுக்கான உத்தரவாதத்தை வழங்கி, சந்தை முன்னோடி என்ற ஸ்தானத்தைப் பேணுவதில் தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீளவலியுறுத்தியுள்ளது. வனவியல் முகாமைத்துவத்தில் அதன் மகத்துவத்தில் நீடித்த அர்ப்பணிப்பை Sadaharitha அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளதுடன், நிறுவனத்தின் போற்றத்தக்க வளர்ச்சிப் பயணத்தையும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தருணம் பிரதிபலிக்கின்றது.
வல்லப்பட்டை மரங்களில் நோய்த்தொற்று தடுப்பிற்கு தனது தனியுரிமையைக் கொண்ட “SP Tech” தொழில்நுட்பத்தை பகிர்ந்து, விற்பனை செய்வதற்காக மலேசியாவில் தனியார், கூட்டாட்சி மற்றும் அரச துறை வல்லப்பட்டை பயிர்ச்செய்கையாளர்களுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டு சர்வதேசரீதியாக அண்மையில் வெற்றிகரமான சாதனையை நிலைநாட்டியிருந்தது Sadaharitha,