ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தலையடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பில் கொழும்பில் நேரடியாகவும் மெய்நிகர் மூலமாகவும் கூட்டணியின் அரசியல் குழு கூட்டம் ஓகஸ்ட் 2 ஆம் திகதி கூடி தீர்மானிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தின்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்டு உத்தியோகபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்படுமென்றும் உத்தேச ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் நலன் சார்ந்து ஏற்கனவே செய்து கொண்டுள்ள சமூக நீதி உடன்படிக்கையை மேலும் தரமுயர்த்துவது, அதன் சாராம்சங்களை ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற செய்வது, ஐக்கிய மக்கள் கூட்டணியில் சட்டபூர்வமாக இணைவது தொடர்பாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் நகல் யாப்பை ஆராய்வது, இதையடுத்து இடம்பெறக்கூடிய பாராளுமன்ற தேர்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அரசியல் குழுவில் காத்திரமாக ஆராயப்படும் என்றும் கூட்டணி தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.