ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தாமாகவே முன்வந்துள்ளதாக அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் “ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்” என்ற தொனிப்பொருளில் நேற்று நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார் .
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் அபிவிருத்திக்கு ஆற்றி வரும் பங்களிப்பு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அளித்துவரும் பங்களிப்பு மற்றும் நாடு மிகவும் நெருக்கடியான சூழலில் அதனை பொறுப்பேற்று திறம்பட செயற்பட்டமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெர முன கட்சியில் உள்ள பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு தன்னிச்சையாக ஆதரவு வழங்க முன் வந்துள்ளதாக அமைச்சர் மனசு நாணயக்கார தெரிவித்தார்.