111
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த சொகுசு வாகனம் கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. கிளிநொச்சி ஏ-9 வீதியில் 155ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சொகுசு வாகனமும் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்துக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆயினும் எவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி குறூப் நிருபர்