இறக்குவானையிலுள்ள வீதி ஒன்றுக்கு இலங்கையின் பிரபல நடிகரான தர்ஷன் தர்மராஜின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அண்மையில் மரணமான நடிகர் தர்ஷன் தர்மராஜின் பிறப்பிடமான இறக்குவானையிலுள்ள வீதி ஒன்றுக்கே அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தர்ஷன் தர்மராஜின் பெயர் சூட்டப்பட்ட இவ்வீதியின் பெயர் பலகை திறப்பு விழா நேற்று (27) வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் அரசியல்வாதிகள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நடிகர் தர்ஷன் தர்மராஜின் நண்பர்களின் முயற்சியால் இந்த வீதி திறக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். இலங்கையில் தமிழ் நடிகர் ஒருவரின் பெயர் முதல் தடவையாக வீதியொன்றுக்கு சூட்டப்படுகின்றமையும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.