125
பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 450 கிராம் பாணின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், குறைக்கப்பட்ட புதிய விலையில் பாணை விற்பனை செய்யாது அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சோதனைகளை மேற்கொள்ளுமாறும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவர, புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.