நீதிமன்ற தீர்ப்புகளின் பின் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை, தற்காலி தீர்வாக 5,000 ரூபாவை இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் அரசு வழங்க வேண்டுமென இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
1,700 ரூபா சம்பளம் தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வரை இடைக்கால கொடுப்பனவாக 5,000 ரூபா வழங்க மாவட்ட வாரியாக தொழிலாளர்களின் பட்டியல், நிரந்தர தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள் என அனைத்து ஆவணங்களையும் செந்தில் தொண்டமான் ஜனாதிபதியிடம் நேற்று சமர்ப்பித்தார்.
செந்தில் தொண்டமானால் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து கோரிக்கையை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 1,700 ரூபா சம்பளத்தை விரைவில் வழங்குவதற்கான வாய்ப்பை ஆய்வு செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.