74
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் உட்பட கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவை நீக்க கட்சி தீர்மானித்துள்ளது. அவரது அண்மைய நடவடிக்கைகள், அவர் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஆராய்ந்த பின்னரே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பவற்றில் வேட்பு மனு வழங்குவதில்லையென்றும் இதற்கு முன்னர் கட்சி தீர்மானம் எடுத்திருந்தது.