உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சார்பில் போரிடும் இலங்கையை சேர்ந்த கூலிப்படையினரில் பலர் ரஷ்ய பிரஜைகளாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அவர்கள் ரஷ்ய பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் கள முனைகளில் சிக்குண்டவர்களை மீட்டுத் தருமாறு கோரும் 446 முறைப்பாடுகள் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்னுமொரு நாட்டின் பிரஜாவுரிமையை நீங்கள் பெற்றுக்கொண்டால் இலங்கையின் பிரஜாவுரிமையை நீங்கள் இழந்து விடுவீர்கள். நீங்கள் இலங்கை பிரஜை இல்லை என்பதால் உங்களின் சார்பில் பேசுவதற்கு எங்களுக்கு உரிமையில்லையென்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.