2024 ஆம் ஆண்டுக்கான ‘ஜனாதிபதி சுற்றாடல் விருது’ வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (28) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை பாதுகாக்கும் நோக்கத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் விழா இம்முறை 10ஆவது முறையாக நடைபெற்றது. இவ்விருது விழாவில் ஊடகப் பிரிவில் எமது சகோதர வார பத்திரிகையான சிலுமின ஊடகவியலாளர் சுரேகா நில்மினி இளங்கோன் தங்க விருதையும், சிலுமின விவரண செய்தி ஆசிரியர் சுபாஷினி வெள்ளி விருதையும் பெற்றனர். நிகழ்வில் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புர, எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
‘ஜனாதிபதி சுற்றாடல் விருது 2024’ ‘சிலுமின’வுக்கு தங்க, வெள்ளி விருதுகள்
96
previous post