சமையல் கலை உணவுக் கண்காட்சி 2024 இன் 21ஆவது பதிப்பில் பிரதான அனுசரணையாளராக இலங்கை பிரதம சமையல்கலை நிபுணர்கள் சங்கத்துடன் தொடர்ந்தும் கூட்டாண்மை வகித்தது லிற்றோ காஸ் லங்கா. சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஜுன் 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த நிகழ்வு சமையலின் கலைத்திறன் மற்றும் புதுமையின் உச்சத்தை வெளிப்படுத்தும் சர்வதேச ரீதியான ஆர்வத்தை ஏற்படுத்தியது. இலங்கைக்கு திரவப்பெற்றோலிய வாயுவை இறக்குமதி செய்யும் பாரிய இறக்குமதியாளரும், விநியோகஸ்தருமான லிற்றோ காஸ் லங்கா நிறுவனம், தொடர்ச்சியாக 21ஆவது வருடமாகவும் இந்த மாபெரும் சமையல் கண்காட்சி மற்றும் வர்த்தக நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாக கௌரவம் பெறுகின்றது. இந்தக் கண்காட்சியில் உள்ள 75 சமையல் காட்சிக் கூடங்களுக்கும் எரிசக்தி விநியோகத்தை வழங்கி லிற்றோ காஸ் நிறுவனம் மீண்டும் ஒருமுறை உத்தியோகபூர்வ திரவப்பெற்றோலிய வாயுப் பங்காளராகியுள்ளது. உணவு பதப்படுத்துதல் முதல் நுகர்வு வரை சமையல் கலைகளின் ஒவ்வொரு அம்சத்தையும் சிறப்பித்துக் காட்டும் உணவுப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விரிவான காட்சிக் கூடங்களை CAFE 2024 கொண்டிருந்தது.
CAFE 2024இல் சமையற் கலைத் திறனை ஊக்குவித்த லிற்றோகாஸ் லங்கா
77