இலங்கையில் தனியார் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி சுகாதார சேவை வழங்குநரும், நாட்டின் முன்னணி சுகாதாரப் பாதுகாப்பு வர்த்தக நாமமும் கொண்ட நவலோக்க மருத்துவமனை குழுமம், 2023/24 ஆம் ஆண்டிற்கான சிறந்த நிதிச் செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. அதன் காரணமாக, நவலோக்க மருத்துவமனை குழுமத்தால் மீள்தன்மை மற்றும் செயற்பாட்டுச் சிறப்பிற்கான குழுவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த முடிந்தது.
அதன்படி, மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில், நவலோக்க மருத்துவமனை குழுமம் 347.8 மில்லியன் ரூபா வரிக்குப் பின்னரான ஒருங்கிணைக்கப்பட்ட நிகர இலாபத்தைப் பதிவுசெய்ததன் மூலம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 114.26% வளர்ச்சியை எட்டியுள்ளது.
இந்த வளர்ச்சி திறமையான சேவை மற்றும் சிறந்த நோயாளர் பராமரிப்புக்கான அவர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.
சவாலான பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில், தனது வணிக மாதிரியின் வலிமை மற்றும் சூழலுக்கு ஏற்றவிதத்தில் மாற்றிக்கொள்ளும் தன்மையை வெளிப்படுத்தி, கடந்த நிதியாண்டில் தனது வருமானத்தை 10,648 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க முடிந்தது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.43% வளர்ச்சியை எட்டியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச, “இந்த குறிப்பிடத்தக்க இலாப அதிகரிப்புடன், நவலோக்க மருத்துவமனைகள் குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முழு குழுவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் விளைவுகளை நாம் காணலாம்.” என தெரிவித்தார்.