கொழும்பின் முன்னணி வட மற்றும் தென்னிந்திய தூய சைவ உணவகங்களில் ஒன்றான துவாரகா, இல்லத்திருமணங்கள் முதல் பெருநிறுவன விழாக்கள் வரை, ஒவ்வொரு தருணத்தையும் சிறப்புமிக்க நிகழ்வாக மாற்றியமைப்பதற்காக கொழும்பு 4, மரைன் டிரைவில் Dawn & Dusk என்ற விருந்து மண்டபத்தை திறந்து வைத்துள்ளது.
Dawn & Dusk என்பது இந்து சமுத்திரத்தை நோக்கியதாக அமைந்த ஒரு நேர்த்தியான, சூழவும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட விருந்து மண்டபமாகும். அதி நவீன, பல மாடி கட்டடத்தின் பிரதான மண்டபம் முதல் தளத்தில் அமைந்துள்ளது.
உயரமான கூரையுடன், தூண்கள் இல்லாமல் அமைக்கபட்டுள்ளதால், விருந்தினர்கள் உள்ளே சென்றவுடன் விசாலமான உணர்வைப் பெறுவார்கள். இந்த மண்டபம் மரைன் டிரைவில் பெரிய கண்ணாடி ஜன்னல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், விருந்தினர்கள் பரந்த இந்தியப் பெருங்கடலின் நீல நீர்ப்பரப்பையும்; மற்றும் அழகான சூரிய அஸ்தமனக் காட்சியையும் கண்டுகளிக்கலாம். பிரதான மண்டபத்தில் 220 நபர்கள் வரை வட்ட மேசை அமைப்பு இருக்கைகளுடன் அமரக்கூடியதாக இருக்கும் அதேநேரம், பொதுவாக தமிழ் திருமண விழாக்களில் காணப்படுவது போல 500 நபர்கள் வரை திரையரங்கு பாணி அமைப்பு இருக்கைகளில் அமரலாம். தரைத் தளத்தில் அமைந்துள்ள விசாலமான புஃபே பகுதியில், உணவு மற்றும் பானங்களை பரந்தளவில் வைக்கலாம். திருமண பரிவாரங்களுக்கு அதிக வசதியை வழங்க, மண்டபத்தில் இரண்டாவது மாடியில் இணைக்கப்பட்ட குளியலறைகள் கொண்ட இரண்டு விசாலமான அறைகள் உள்ளன, அவை மணமகனும், மணமகளும் தங்கள் திருமணநாளில் உடை மாற்றும் மற்றும் ஒப்பனை செய்து கொள்ளும் அறைகளாகப் பயன்படுத்தலாம்.
மேலதிகமாக Dawn & Dusk 80 நபர்கள் வரை அமரக்கூடிய ஒரு தனிப்பட்ட விழா அறையையும் கொண்டுள்ளது இது பிறந்தநாள், ஆண்டுவிழாக்கள் மற்றும் நிறுவன நிகழ்வுகள் போன்ற சிறிய விழாக்களுக்கு மிகவும் பொருத்தமானது.