பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு பாலைவனத்தில்
நடந்த பாரிய தியாகம்
படைத்தோன் அல்லாஹ்வின்
கட்டளைக்கு அடிபணிந்து
இறை நேசர் இப்றாஹீம்
நபி தன் அருந்தவ புதல்வர் இஸ்மாயில் நபியை
அறுத்துப் பலியிட துணிந்த தியாகமே
ஹஜ்ஜு பெருநாள்
மாண்புமிகு இஸ்லாத்தில் கடைசி மாதமாய்
வருடத்தில் நிலை கொண்ட நன்நாளே பொருள்
நிறைந்த தியாகத் திருநாள்
கடந்த கால பாவங்கள்
எல்லாம் நொடிப் பொழுதில்
மாறிடவே நல்லுள்ளம் தியாக எண்ணம்
மலரட்டும் வளரட்டும் இந் நாளில்
உள்ளமதிலே நல்லெண்ணம் கொண்டு
வெள்ளாடை அழகாய் அணிந்து
புனித மண்ணில் தடம் பதித்து
தல்பியாவும் தக்பீரும் சேர்ந்தே ஒலித்திட
ஓர் உன்னதப் பயணம் இது
பாவக்கறை மறையும்
அகிலத்தின் ஒற்றுமையினை
அழகாய் இயம்பிடும்
ஹஜ்ஜுக்குச் சென்றோரை
அன்று பிறந்த பாலகனாய்
மாற்றிடும் அற்புத ஹஜ்ஜாகும்
அலை மோதும் சனக் கூட்டம் அல்லாஹ்வின்
அருளொன்றே மோட்சம் தரும்
உண்மையதை
தல்பிய்யா நாதமதில் உலகெல்லாம் செவி
கொள்ளும்
உன்னதம் தருகின்ற தியாகத் திருநாள்
தீயவை அழித்து நன்மைகள் பெருகிட
படைத்தவன் அழித்திட்ட பசுமைமிக்க திருநாள்
தியாக ஒளியுடன் வலுவுடன்
வருக தீன் சுவை அள்ளி தருக
இறை நேசர் இப்றாஹிமின்
இறையச்சம் மெச்சியவன்
அறுத்து பலியிட அருளிய
அந்த சுவனத்து ஆட்டை
அறுத்து இறைவன் வழி பணிய அமரர்
ஜிப்ரீலும் கொண்டு வந்தனரே
எல்லோர் வாழ்வில் ஏற்றம் பெறவே
ஏணியாக வந்த திருநாள் நல்லோர் போற்றி நலம்
பெறவே நாடு சிறக்க கொண்டாடும் நன்நாள்
உறவுகளோடு உறவாடும் உன்னதத் திருநாள்
மகிழ்ச்சி பொங்கும் மனது
மறக்காத பொன்நாள்
அகமகிழும் அற்புத நன்நாள்
புத்தாடை அணிந்திடும்
மணக்கும் ஹஜ்ஜுப் பெருநாள்
உலகின் பரிசுத்த ஆலயம்
கஃபாவை வாழ்நாளில்
ஒருமுறையேனும் உணர்வு
ததும்ப தரிசித்திட