109
காசாவில் இடம்பெற்று வரும் போரை நிறுத்தி சுதந்திர பலஸ்தீனத்தை வழங்கக் கோரி குருநாகலில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குருநாகல் வாழ் முஸ்லிம்களினால் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் (14) குருநாகல் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக ஜும்ஆ தொழுகையின் பின்னர் நகர சிவில் சமூக அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டது.
குருநாகல் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மொஹினுதீன் அஸார்தீன், சமூகப் பணியாளர் நஸார் ஹாஜியார் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.