இந்த கடன் தவணையை பெற்றுக்கொண்டதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கமைய இலங்கை செயற்படுகின்றமைக்கான சான்றிதழ் கிடைத்துள்ளதாக, ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானத்துறை பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த தெரிவித்தார்.
இதன் மூலம் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பாரிய பலம் கிடைப்பதுடன், மூன்றாவது கடன் தவணையின் ஒப்புதல் மூலம் தற்போதுள்ள பல பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமெனவும், அவர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் வெற்றியடைந்ததன் காரணமாக ஏனைய சர்வதேச நிறுவனங்களுடனான கொடுக்கல், வாங்கல்கள் யதார்த்தமாகியுள்ளதாவும், அவர் குறிப்பிட்டார்.
ஒரு நாடாக IMF உடன் நாம் கட்டியெழுப்பிய நம்பகத்தன்மை IMF மட்டுமின்றி, மற்றைய நாடுகளுக்கும் கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கும் ஒரு நேர்மறையான செய்தியாக கருதப்படலாமெனவும், பேராசிரியர் வலியுறுத்தினார்.