Home » ஆளுநர் செந்திலை நேரில் சந்தித்து முறைப்பாடு செய்த மாணவர்கள்
திருமலை பெறுபேறுகள் இடைநிறுத்திய விவகாரம்

ஆளுநர் செந்திலை நேரில் சந்தித்து முறைப்பாடு செய்த மாணவர்கள்

உரிய தீர்வை பெற்றுத்தருவதாக ஆளுநர் உறுதி

by Damith Pushpika
June 16, 2024 7:00 am 0 comment

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் சுமார் 70 மாணவர்களின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் அம்மாணவர்கள் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.

பரீட்சைகள் திணைகளத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக காதுகளை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியாது. எனினும், இம்மாணவர்கள் அவ்வாறு பரீட்சைகள் எழுதியதால் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் தாம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்த மாணவர்கள், தமக்கு உரிய தீர்வை பெற்றுதர நடவடிக்கைகைள எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதனால் தாம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைமை தொடர்பாக ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்த இம்மாணவர்கள், தமக்கு உரிய தீர்வை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத் தருவதாகவும் மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division