36
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2024 நேற்றுமுன்தினம் மாலை கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. இவ்விழாவுக்கு வருகை தந்த பிரமுகர்கள் கம்பன் தலைமை அலுவலக கோட்டத்திலிருந்து ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க அழைத்துச் செல்லப்படுதையும், விழாவின்போது கம்பன் கழகம் வெளியிட்ட இவ்வருடத்துக்கான சிறப்பு மலரின் முதலாவது பிரதியை இந்தியா, தமிழ்நாடு கோவிலூர் ஆதீனத்தை சேர்ந்த சீர்வளர்சீர் நாராயண ஞானதேசிக சுவாமிகளிடமிருந்து இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்வதையும் படங்களில் காணலாம்.