Home » கிராமிய வாழ்க்கை முறையை மதிப்போம்..!

கிராமிய வாழ்க்கை முறையை மதிப்போம்..!

by Damith Pushpika
June 9, 2024 6:56 am 0 comment

தயவுறும் தார கையே நீ
தருமொழி நிலவுடன் சேர்ந்து,
புவியது ஒளிர்ந்திடும் வண்ணம்,
புன்னகை புரிவது அழகு !
இமை திற விழிகள் வானில்,
எமதுயர் கிராமியம் மலர
செகமது உழைத்திட வேண்டும்- நீ
சிரிப்பினைச் சிந்திட வேண்டும்!

மாடுகள், கன்றுகள், இடையர்
மாசுறா பால், தயிர் ,மோரு
கேடுக ளில்லா வாழ்வு
கேட்பது மனிதரின் நாட்டம்
தேடுயர் செல்வங்க ளெல்லாம்,
சேர்ந்தது கிராமிய வாழ்வாம்,
பாடுறும் வளங்களை யுற்று
பாரினில் கிராமிய மோங்கும் !

வயல் வெளி கதிர்களைச் சார்ந்து,
வாழ்ந்திடும் நாடது நாடே !
அயல் வெளி மீன்பிடி ஆறு
ஆற்றுமை தருவதும் ஊரே!

கயல் முர லாம்பல் கொடுவா,
கறியுறும் மக்களின் தேவை
முயல்வது போக்கும் தாழ்வு- நாம்
முதன்மை அடைந்திடும் வாழ்வு!

பனி மழை தருவதும் சுகமே !
பார் மழை வருவதும் வரமே!
கனி மரம் தோப்புக ளென்று,
காற்றுறும் காலமும் நலமே!
நனி சுகமெல்லாம் கொண்ட,
நமது கிராமியம் காப்போம்,
அமைவுறும் வாழ்வது ஓங்க- நாம்
உழைத்து வளங்களைச் சேர்ப்போம்!

பார்த்து சிரித்திடும் கதிர்கள்,
பச்சைத் தளையுறும் பயிர்கள்,
சேர்த்து விளைத்திடும் செல்வம்,

சீரிய கிராமியம் காணும் !
ஊர்க்கு செழிப்பது உண்டு’
உண்மை நிலையிது என்று,
பார்க்கும் மானிடம் சொல்லும் !
பாரினில் கிராமியம் வெல்லும்!

வாழ்வுறும் கிராமிய மோங்கி
வளர்ந்து சிறந்திடும் வீடு,
நாளுறும் உழைப்பினை தாங்கி

நலிவினைக் களைந்திடும் நாடு !
தோளுறும் செல்வங்களெல்லாம்
துயரினைப் போக்கிடும் கூடு- நம்
நாள் கழிந்தேகிடும் வாழ்வு
நலமுற உயரத் தேடு !

ஏரூர் கவிமாமணி எம்.ரி.எம்.அன்ஸார். ஏறாவூர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division