59
தன்னகந்தை மிகைத்து
தனிமை வளர்த்து
நெருக்கடியை உணர்ந்து
நெருப்பில் கனன்று
நெருடல்களில் உழன்று
நிம்மதி இழந்து
மனமிருகம் கசிந்து
மௌனம் தின்று
புனிதம் கழிந்து
புன்னகை இழந்து
பிம்பம் தொலைத்து
பிதற்றலே கதியாகி
சபிக்கப்பட்டவனாக மாறி
சிலுவை சுமந்து
வாடித்தளர்ந்து
வற்றாத
கண்ணீர் கொண்டு
உன்மத்தம் சூழ்ந்து
உருகி வழிந்து
இருளோடு இருளாகி
அழிந்து அரூபமாகி
மறைந்து போவதே
நேசமின்றி வாழ்வது!