47
சேற்றுக் குழிகளுக்குள்
மின்னும்,
குட்டி நிலாக்கள்.
வயல் காடு
பச்சையாய்
தெரிகிறது,
விவசாயி வியர்வை.
ஊழல் ஒழிப்பு
திட்டம் தயாரானது,
கோடி
கொமிசனோடு.
நீ ரசித்த பின்தான்
அழகு பெறுகிறது,
என் கவிதைகள்.
நகரத்து வாழ்க்கை
கீச்சிடும் கிளி,
அழைப்பு மணி.
முற்றத்து மாமரம்
பார்த்தாலே
இனிக்குது,
தேன் கூடு.
உயரச் சென்றாலும்
இன்னும்
என் பிடியில்,
பட்டம்.
அடை மழை
அதிக சத்தம்,
தகட்டுக் கூரை
அரை
வட்டத் தோரணம்
ஏழு
வண்ண ஹைக்கூ,
வானவில்.
மிகச் சரியாக
சொல்கிறாய்,
பிழைகளை.