46
உன்னோடிருந்த பள்ளிக்காலம்
இனிய வசந்த காலம்!
நெஞ்சம் தனில் இனிக்கும்
நினைவை தந்த உம் நட்பு!
உம் பிரிவை எண்ணி வருந்துகிறது!
கல்லூரி எனும் நேசத்தில் மிதந்தோம்!
நட்பு என்ற வாசகத்தில் மகிழ்ந்தோம்!
துரோகம் எனும் குரோதத்தை மறந்து
பாசம் எனும் தொட்டிலில் தவழ்ந்தோம்!
கல்விக் கடலில் தத்தளித்து
பேனாவை நேசித்து
காகிதத்தை கண்டவுடன் தடுமாறி
முடித்தோம் கல்விக் காலத்தை!
நினைப்போம் இன்ப நினைவுகளை!
இது என்ன பிரிவுகள்!
மனதை வாட்டும் கவலைகள்!
நிலையில்லா புகழ் எண்ணி
நிலையான அறிவை ஏற்று!
பழி நிறைந்த உலகினிலே!
பாசப்பிணைப்பாக!
என்றும் திகழ்வோம்
–