37
காலம்,
ஏதோ ஒரு நியதிக்கு உட்பட்டு
கோளோஞ்சிகிறது எம்மை
காலத்தின் பொம்மைகள் நாம்
காலம் ஓடுகின்றது
நாமும் காலத்தோடு ஓடுகின்றோம்
இந்த ஓட்டப் பந்தயத்தின்
வெற்றி நாயகன் யாரோ
காலமும் நாமும் ஓடுகின்றோம்
நாம்
ஓடி ஓடிக் களைத்து சோர்ந்து
நோயுடன் உடல் வற்றி ஈர்க்காகி
சருகாகின்றோம்
காலம் ஒரு கணம்
எம்மை ஏளனப் பார்வை பார்த்து
ஓடி ஓடி
எங்கோ செல்கின்றது
காலம் நிற்குமா
அதனுடன் போட்டியிட
அடுத்த வாரிசுகள்
திரும்பவும் அதே ஓட்டம்
அதே பந்தயம்
நாம் எப்போ வெல்வோம்