36
இன்று
சாதி
தலை தூக்கும்,
நாளை அது
கூத்தாடும்
அதுவே பின்னர்
தலையாட்டும்
பத்து வருஷம்
பார்த்திருக்க மறையும்
நாற்பது வயது
முதிர் கன்னிக்கு
சொந்த குலத்தில்
வரன் வேண்டும்
இரண்டாம் தாரத்துக்கும்
சம்மதம்
இப்படியே
இளமையை பலி கொடுக்க
ஏன் கல்லானாய்
புதுமைப் பெண்ணே!